fbpx

பலாத்காரம் செய்யப்பட்டதால் 16 வயது சிறுமி கர்ப்பம்: கருவை கலைக்க கருணையுடன் அனுமதி அளித்த உயர் நீதிமன்றம்..!

பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் கருவுற்ற சிறுமியின் கருவை கலைக்க மும்பை உயர்நீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது. மும்பையில் உள்ள சிறுமிகள் காப்பகத்தில் இருந்த சிறுமி ஒருவர், கர்ப்பமாக இருந்தது விசாரணை அதிகாரிகளுக்கு தெரிய வந்தது. இதனை அடுத்து போக்சோ சட்டத்தின் கீழ் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர். இந்த நிலையில், கருவுற்ற சிறுமி தான் ஏழ்மையில் சுழல்பவள் என்றும், ஒரு குழந்தையை பெற்றெடுத்து வளர்க்கும் அளவுக்கு பொருளாதார ரீதியாக வசதியாக இல்லை என்றும், பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டதால் ஏற்பட்ட கருவை கலைக்க அனுமதிக்க வேண்டும்,  இந்த கரு உருவானதால் நான் மிகுந்த மன உளைச்சலில் அவதிப்பட்டு வருகிறேன் என்றும் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து உள்ளார்.

இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், சிறுமியின் கருவை கலைக்க அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளனர். முன்னதாக வழக்கு விசாரணையின் போது, ஒருவர் பலாத்காரம் செய்யப்பட்டதால் உருவான கர்ப்பம் தேவையற்ற கர்ப்பம் என்று நீதிமன்றம் கருதுவதாகவும், குழந்தையை பெற்றெடுக்க வேண்டும் என்று எந்த ஒரு பெண்ணையும் வற்புறுத்த முடியாது என்று,ம் அது அவர்களுடைய தனிப்பட்ட விருப்பம் என்றும், இவர் சிறுமியாக இருப்பதால் இவருடைய கருவை கலைக்க நீதிமன்றத்திற்கு எழுத ஆட்சேபணையும் இல்லை என்றும் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த சிறுமியின் கர்ப்பம் குறித்து மருத்துவர்கள் அறிக்கையின்படி மனுதாரர் 16 வாரங்கள் கர்ப்பமாக உள்ளார் என்பது தெரியவந்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கர்ப்பத்தை தொடர்ந்தால் அது அவரது வாழ்க்கை மற்றும் மன ரீதியாகவும் உளைச்சல்களை ஏற்படுத்தும் என்பதை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது. மேலும் குழந்தையை பெற்றெடுத்தால் கூட, அது இந்த சிறுமிக்கு உடல் ரீதியாகவும் மனரீதியாகவும் அதிக பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை இந்த நீதிமன்றம் கருத்தில் கொள்கிறது.  இந்த அத்தனை காரணிகளையும் கருத்தில் கொண்டு சிறுமிக்கு பலாத்காரத்தினால் ஏற்பட்ட 16 வார கருவினை கலைக்க இந்த நீதிமன்றம் அனுமதி வழங்குகிறது என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

Baskar

Next Post

கூட்டுறவுத்துறையில் ரூ.750 கோடி மோசடி..! அமைச்சர் ஐ.பெரியசாமி பரபரப்பு தகவல்..!

Fri Jul 1 , 2022
கடந்த அதிமுக ஆட்சியில் கூட்டுறவுத் துறையில் நடந்த ரூ.750 கோடி மோசடி தொடர்பாக விசாரணை நடத்தப்பட்டு வருவதாக அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்துள்ளார். திண்டுக்கல்லில் கூட்டுறவு துறை சார்பில் கலை, அறிவியல் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை தொடங்கப்பட்டது. இந்த நிகழ்வில் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ.பெரியசாமி கலந்து கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், ”10 ஆண்டு கால அதிமுக ஆட்சியில் 5 கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளது. ஆனால், திமுகவின் ஒருவருட ஆட்சியில் 33 […]
”அன்றாடம் பயன்படுத்தும் பொருட்கள் மீதான ஜிஎஸ்டி வரியை நீக்க வேண்டும்”..! அமைச்சர் ஐ.பெரியசாமி

You May Like