fbpx

வாங்கியது ரூ.20 லட்சம்.. ஆனா 2 கோடி செலுத்த நோட்டீஸ்..!! – தனியார் நிதி நிறுவனத்தில் அராஜகத்தால் ஷாக் ஆன குடும்பத்தினர்

திருப்பூர் மாவட்டம் அவிநாசியை அடுத்த கந்தம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் சோமசுந்தரம் (34). இவர் கடந்த 2017-ம் ஆண்டு, திருப்பூர் DHFL (DIWAN HOUSING FINANCE LIMITED) தனியார் நிதி நிறுவனத்தில் 30 வருட கால அவகாசத்தில், மாதம் ரூ.16,457 தவணை என்ற அடிப்படையில் ரூ.20,80,000 வீட்டுக்கடன் பெற்று வீடு கட்டியுள்ளார்.

கடன் பெற்றதில் இருந்து தவறாமல் தவணை செலுத்தி வந்தார், இதையடுத்து DHFL நிதி நிறுவனத்தை கடந்த 2022-ம் ஆண்டு PCHFL (PIRAMAL CAPITAL AND HOUSING FINANCE LIMITED) நிதி நிறுவனம் வாங்கியுள்ளது. மாற்றப்பட்ட நிர்வாகம் சோமசுந்தரத்தின் மாதத் தவணையை ரூ.19,750 ஆக நிர்ணயித்துள்ளது. அதன்படி, மாதம் ரூ.19,750 தவணை செலுத்தி வந்துள்ளார். பின்னர் தனிபட்ட காரணங்களால் ஜனவரி மற்றும் மே மாதம் என இரு தவணைகள் கட்ட முடியாமல் போனது.

இந்நிலையில், தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் நான்கு பேர் கடந்த 8-ம் தேதி சோமசுந்தரத்தின் வீட்டிற்கு வந்து, பெண்களிடம் அவதூறாக பேசியுள்ளனர். அதோடு வீட்டுச் சுவரில் PCHFL கடனில் உள்ளது எனவும், தவணை கட்ட தவறியதால் தனியார் நிதி நிறுவனம் இந்த கட்டடத்தை சுவாதீனம் செய்யப்பட்டும் என்று எச்சரிக்கை விடுத்த வாசகங்கள் அடங்கிய பிளக்ஸ் பேனரை வீட்டின் சுவற்றில் ஓட்டியுள்ளனர்.

இரண்டு தவணைகளுக்காக தனியார் நிதி நிறுவன ஊழியர்கள் அராஜகம் செய்வதைக் கண்டு சோமசுந்தரம் மனம் உடைந்து போனார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசுகையில், “30 வருட தவணையாக இருந்த எனது வீட்டுக்கடனை எனக்கு தெரியப்படுத்தாமலேயே 82 ஆண்டுகளுக்கு உயர்த்தியுள்ளனர். கடனாக வாங்கிய 20,80,000 ரூபாய்க்கு 82 ஆண்டுகளில் சுமார் ஒரு கோடியே என்பது லட்சம் கட்டும் வகையில் மாற்றி பின்னர் பலமுறை முறையிட்டு இப்போது 40 ஆண்டுகளாக மாற்றியுள்ளனர். மேலும் எனது மனைவி மற்றும் தாயாரிடம் அருவறுக்கத்தக்க வகையில் பேசி, அத்துமீறி எனது வீட்டில் நடந்து கொண்டுள்ளனர்” என வேதனையுடன் தெரிவித்தார்.

Read more; பிக்பாஸ் எலிமினேஷன்… மீண்டும் ஒரு பெண் போட்டியாளருக்கு டாட்டா காட்டும் பிக்பாஸ்..!! அப்போ சாச்சனா?

English Summary

Purchased Rs.20 lakhs.. but notice to pay 2 crores..!! – A family shocked by anarchy at a private financial institution

Next Post

தமிழகத்தில் ஓய்வூதிய இயக்குனரகம் மூடல்... அரசின் அறிவிப்பிற்கு வலுக்கும் கண்டனம்...!

Sun Nov 17 , 2024
Closure of the Pension Directorate in Tamil Nadu... Strong condemnation of the government's announcement

You May Like