fbpx

நடுக்கடலில் சேசிங்!. பாகிஸ்தானால் சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்கள் மீட்பு!. இந்திய கடலோர காவல்படை அதிரடி!

Indian Fishermens: எல்லையில் மீன்பிடித்துக்கொண்டிருந்த இந்திய மீனவர்களை சிறைபிடித்த பாகிஸ்தான் கடற்படையினரை துரத்திச்சென்று இந்திய கடலோர காவல் படையினர் மீட்ட சம்பவம் தொடர்பான வீடியோ வெளியாகியுள்ளது.

இந்திய மீனவர்கள் 7 பேர், நேற்று இந்தியா – பாகிஸ்தான் எல்லையில், இந்திய கடல் பரப்பில் மீன் பிடித்துக்கொண்டு இருந்தனர். அப்போது அங்கு வந்த பாகிஸ்தான் கடற்படையினர், இந்திய மீனவர்களை சிறைபிடித்து செல்ல முயன்றனர். தாங்கள் பாகிஸ்தான் நாட்டின் கடற்படையால் கைது செய்யப்பட்டுள்ளதாக, மீன்பிடி தடை மண்டலத்திற்கு (NFZ) அருகே இயங்கும் இந்திய மீன்பிடி படகிலிருந்து (IFB) கடலோர காவல்படைக்கு ஆபத்து சமிக்ஞையை மீனவர்கள் அனுப்பினர்.

https://twitter.com/ANI/status/1858522064669581756?

இதையடுத்து, இந்திய கடலோர காவல்படை கப்பல் அக்ரிம் சுமார் 2 மணிநேரம் துரத்திச் சென்று, பாகிஸ்தான் கப்பலை இடைமறித்து இந்திய மீனவர்களை மீட்டது. பாகிஸ்தான் கடல்சார் பாதுகாப்பு அமைப்பு (பிஎம்எஸ்ஏ) கப்பல் மூலமாக சிறைபிடிக்கப்பட்ட இந்திய மீனவர்களை, கடற்படை களமிறங்கி வெற்றிகரமாக மீட்டுள்ளது. பாகிஸ்தான் கப்பலை இடைமறித்து இந்த சம்பவம் நடைபெற்றுள்ள நிலையில், மீனவர்கள் மீட்கப்பட்ட செய்தி தற்போது வெளியாகியுள்ளது.

Readmore: உஷார்!. குளிர்காலத்தில் கீசர் பயன்படுத்துகிறீர்களா?. விபத்து ஏற்படும் அபாயம்!. பாதுகாப்பு டிப்ஸ் இதோ!

English Summary

Indian Coast Guard Ship Chases Pakistani Vessel For 2 Hours, Rescues 7 Fishermen | Video

Kokila

Next Post

A+ படங்களை 18 வதை கடந்தவர்கள் மட்டுமே பார்க்க அனுமதிக்க வேண்டும்...! மத்திய அரசு அதிரடி

Tue Nov 19 , 2024
A+ films should only be allowed to be viewed by those over 18.

You May Like