பொதுவாக இல்லத்தரசிகளுக்கு வீடி செய்ய வேண்டிய வேலை அதிகம் இருக்கும். எதை எப்போது செய்வது என்று அவர்கள் பல நேரம் திணறுவது உண்டு. வீட்டில் செய்யும் வேலைகளை விரைவாக முடிக்க ஏதாவது டிப்ஸ் கிடைக்குமா என்று நீங்கள் பலரிடம் கேட்பது உண்டு. பல நேரங்களில் இணையத்திலும் தேடுவது உண்டு.. அந்த வகையில், நாம் அதிக நேரம் செலவு செய்யும் ஒரு வேலை என்றால் அது கீரை பறிப்பது தான். ஆம், ஆனால் கீழே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ் பயன்படுத்தி, சுலபமாக முருங்கை கீரையை பறித்து விடலாம்.
இதற்க்கு முதலில், முருங்கைக் கீரைக்கட்டு முழுவதும் மறையும் அளவிற்கு கட்டைப் பை அல்லது அரிசிப் பையை எடுத்துக் கொள்ளுங்கள். இப்போது கீரைக் கட்டை பைக்குள் வைத்து நன்றாக சுற்றிவிடுங்கள். பின்னர், சுற்றிய பை மீது கனமான இரும்பு தோசைக் கல்லை 3 மணி நேரத்திற்கு அப்படியே வைத்து விடுங்கள். பின்னர், தோசைக் கல்லை அகற்றிவிட்டு, பைக்குள் வைத்து முருங்கைக் கீரையை உதறினால், தண்டில் இருந்து கீரை வந்துவிடும். இப்போது நீங்கள் இதை நன்கு கழுவி சமைத்து சாப்பிடலாம்.
நீங்கள் குடத்தை சுலமாக கழுவ ஒரு டிப்ஸ்… இதற்க்கு நீங்கள் சிறிது அளவு கல் உப்பு மற்றும் அரிசி மாவு அல்லது கோதுமை மாவை எடுத்துக் கொள்ளுங்கள். இரண்டையும் சிறிது நீரில் சேர்த்து பசை போல் ஆக்கி கொள்ளுங்கள். இப்போது இதைக் கொண்டு குடத்தை கழுவினால் அதிகளவில் தண்ணீர் செலவளிக்க வேண்டாம். குடமும் பளிச்சென மாறிவிடும்.
READ MORE: கர்ப்பிணிகளே.. ஒரே வாரத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க வேண்டுமா? இதை மட்டும் சாப்பிடுங்கள்..