கோவை சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த பணியிடங்களுக்கு தகுதி உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது,
பணியிடங்கள் : கோவையில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் நிர்வாகி, உதவிப் பேராசிரியர்கள், உதவியாளர் உள்ளிட்ட காலிப் பணியிடங்கள் நிரப்பப்படவுள்ளன. இந்த கல்லூரியில் மொத்தம் 7 காலிப் பணியிடங்கள் உள்ளன. இந்தப் பணியிடம் தற்காலிக அடிப்படையில் நிரப்பப்பட உள்ளது.
அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் : அசிஸ்டென்ட் ப்ரொஃபசர் இன் பிசினஸ் அனலிட்டிக்ஸ் பணியிடத்துக்கு 2 காலிப் பணியிடங்கள் உள்ளன. M.Sc. / M.E./ MCA / MBA படித்திருக்க வேண்டும். 45 வயதுக்கு உட்பட்டவராக இருக்க வேண்டும். ரூ. 38,500 முதல் 52,250 வரை ஊதியம் வழங்கப்படவுள்ளது.
அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர் : அட்மினிஸ்டிரேட்டிவ் ஆபிசர் பணியிடத்துக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இந்தப் பணிக்கு இளநிலை பட்டப்படிப்பு படித்திருக்க வேண்டும். ஐந்து ஆண்டுகள் பணி அனுபவம் வேண்டும். அதேபோல, 50 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் வேண்டும். ரூ. 20,000 முதல் 50,000 வரை சம்பளம் வழங்கப்படவுள்ளது.
அசிஸ்டன்ட் பணி : அசிஸ்டன்ட் பணிக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இளநிலை பட்டப்படிப்பு படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். Junior Engineer பணிக்கு ஒரு காலி பணிடம் உள்ளது. Bachelor Degree in Civil Engineering OR Diploma in Civil Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு முதல் நான்கு ஆண்டுகள பணி அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம்.
Electrical Supervisor : 1 காலிப் பணியிடம் உள்ளது. Bachelor Degree in electrical Engineering OR Diploma in Electrical Engineering படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம். இரண்டு முதல் நான்கு ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம்.
Assistant Warden (Women) : பணியிடத்துக்கு ஒரு காலிப் பணியிடம் உள்ளது. இளநிலை பட்டப் படிப்பு படித்திருப்பவர்கள் விண்ணப்பிக்கலாம். 5 ஆண்டுகள் பணி அனுபவம் அவசியம். இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படவுள்ளனர்.
எப்படி விண்ணப்பிப்பது? விண்ணப்பதாரர்கள் https://svpistm.ac.in/admin/AppCode/Upload/announcement/58SVPISTM%20recruitment.pdf என்ற இணையதளம் மூலமாக காலிப் பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கலாம். இந்த இணையதளம் மூலமாக விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும். பின்னர், விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து உரிய ஆவணங்களுடன் The Director, SVPISTM, No.1483, Avinashi Road, Peelamedu, Coimbatore – 641004 என்ற முகவரியில் நேரடியாக கலந்துகொள்ளலாம்.