தெலுங்கு செய்தி சேனலில் பணிபுரியும் கேமராமேன் சென்னையில் சாலை விபத்தில் சிக்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
சென்னையில் வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் பைக் மீது மோதியதில் ஒரு நபர் உயிரிழந்தார். இறந்தவர் தெலுங்கு செய்தி சேனலில் ஒளிப்பதிவாளராக பணியாற்றிய பிரதீப் குமார் என அடையாளம் காணப்பட்டார். அவர் பகுதி நேர ரேபிடோ டிரைவராகவும் பணியாற்றியதாக கூறப்படுகிறது. இந்த விபத்து செவ்வாய்க்கிழமை இரவு இடம்பெற்றுள்ளது. மதுரவாயல்-தாம்பரம் மேம்பால புறவழிச்சாலையில் வேகமாக வந்த பிஎம்டபிள்யூ கார் மோதியதில் விபத்து ஏற்பட்டது. விபத்து நடந்ததையடுத்து, காரை ஓட்டி வந்த டிரைவர், காரை நிறுத்திவிட்டு தப்பியோடினார்.
வாகனம் கைவிடப்பட்டிருப்பதைக் கண்ட பயணிகள் விபத்து குறித்து போலிசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பார்த்தபோது, இருசக்கர வாகனம் உடைந்ததை கண்டுபிடித்தனர். விபத்து நடந்த இடத்திலிருந்து சுமார் 100 மீட்டர் தூரத்தில் பிரதீப் குமாரின் சடலம் புதருக்குள் இருந்து மீட்கப்பட்டது. இதை எடுத்து அவரது உடலை உடற்கூறு ஆய்வுக்காக அனுப்பி வைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் காரின் ஓட்டுநர் தப்பி சென்ற அளவில் அவர் யார் என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
அதிகாலை நேரம் என்பதால் சாலையில் மக்கள் நடமாட்டம் இல்லாததால் பிஎம்டபிள்யூ காரில் வந்தவர் அதிவேகமாக வந்ததாகவும் சாலையோரமாக சென்ற பிரதீப் குமாரை மோதி தூக்கி வீசிவிட்டு சிறிது தூரத்தில் கார் நின்றதாகவும் விபத்தை நேரில் பார்த்தவர்கள் கூறியுள்ளனர்.
Read more ; ஊழியர்கள் டேட்டிங் செல்ல வெகுமதி வழங்கும் சீன நிறுவனம்..!! இது புதுசா இருக்குண்ணே..