fbpx

விவாகரத்து வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜரான ஐஸ்வர்யா ரஜினிகாந்த்.. இந்த முறையும் எஸ்கேப் ஆன தனுஷ்..!! என்னதான் பிளான்?

மீண்டும் இணைந்த ஜோடி..!! ஐஸ்வர்யாவுடன் ரொமான்ஸ் செய்யும் தனுஷ்..!! வீடியோ வைரல்..!!

இயக்குநர் கஸ்தூரி ராஜாவின் மகனும், இயக்குநர் செல்வராகவனின் தம்பியுமான நடிகர் தனுஷ், நடிகர் ரஜினிகாந்தின் மகளும், இயக்குநருமான ஐஸ்வர்யா ரஜினிகாந்தை இருவீட்டார் சம்மதத்துடன் கடந்த 2004ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் தேதி திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். சுமார் 18 ஆண்டுகள் திருமண வாழ்வுக்குப் பின்னர், கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் கடந்த சில ஆண்டுகளாக இருவரும் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில், கடந்த 2022ஆம் ஆண்டு இருவரும் சமூக வலைத்தளத்தில் தாங்கள் பிரிந்து விட்டதாக பதிவிட்டுள்ளனர்.

தனுஷ் மற்றும் ஜஸ்வர்யா இடையே உள்ள பிரச்னையைத் தீர்க்க அவர்களுடைய குடும்பத்தினர் மற்றும் நண்பர்கள் ஈடுபட்டுள்ளனர். ஆனால், இருவரும் விவாகரத்து பெறுவதில் உறுதியாக இருந்ததாகக் கூறப்படுகிறது. இந்நிலையில், இருவரும் தங்களுடைய திருமண வாழ்க்கையை முடித்துக் கொள்ளும் வகையில் பரஸ்பரம் விவாகரத்து கோரி சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளனர். அதில், 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தங்களின் திருமணத்தைச் செல்லாது என அறிவிக்க வேண்டும் எனக் கோரியுள்ளனர்.

இந்த மனு முதன்மை குடும்ப நல நீதிமன்ற நீதிபதி சுபாதேவி முன் நவ.3ம் தேதி மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் ஆஜராகவில்லை.  இதையடுத்து வழக்கின் விசாரணை நவம்பர் 21ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது. விவகாரத்து கோரிய வழக்கில் நடிகர் தனுஷ், ஐஸ்வர்யா ஆகியோர் மூன்றாவது முறையாக ஆஜராகவில்லை என்பதால் விசாரணை மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. அடுத்த விசாரணைக்கு இருவரும் ஆஜராக நீதிபதி உத்தரவிட்டது. இந்த நிலையில், ஐஸ்வர்யா ரஜினிகாந்த் ( நவ.21ம் தேதி )இன்று சென்னை குடும்ப நல நீதிமன்றத்தில் நேரில் ஆஜரானார்.

Read more ; ’சின்ன மருமகள்’ சீரியல் நடிகைக்கு என்ன ஆச்சு..? முகம் முழுவதும் தீக்காயம்..!! ரசிகர்கள் அதிர்ச்சி..!!

English Summary

Aishwarya Rajinikanth appeared in person at the Chennai Family Welfare Court today (November 21) in the divorce case with Dhanush.

Next Post

வாக்கிங் நல்லது தான்.. ஆனா இப்படி நடந்தால் தான் நீண்டகாலம் இளமையுடன் வாழ முடியும்..

Thu Nov 21 , 2024
How brisk walking can help you live longer and healthier.
walking

You May Like