தமிழக அரசியலில் நடிகர் விஜய்யின் வருகைக்குப் பிறகு, திரைத்துறையைச் சேர்ந்த மற்ற நட்சத்திரங்களின் அடுத்தகட்ட நகர்வுகளும் கவனத்தைப் பெற்றுள்ளன. அந்த வரிசையில் தற்போது நடிகர் தனுஷின் நற்பணி இயக்கம் தொடர்பான நிகழ்ச்சி பேசுபொருளாகியுள்ளது. சென்னையில் நடைபெறும் மகளிர் அணியினருடனான சந்திப்பு, தனுஷின் அரசியல் திட்டம் குறித்த விவாதத்தையும் கிளப்பியுள்ளது. சென்னை சோழிங்கநல்லூரில் உள்ள ஜேப்பியார் கல்லூரியில் நடைபெறும் இந்தச் சந்திப்பில் சுமார் 3,000 பேர் பங்கேற்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. நற்பணி […]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் ஜெயிலர் 2 பட வெளியீட்டை ஒட்டி, சிவகார்த்திகேயன் மற்றும் தனுஷ் பகிர்ந்துள்ள சமூக வலைதளப் பதிவுகள் தற்போது ரசிகர்களின் கவனத்தைப் பெற்றுள்ளன. இதில் சிவகார்த்திகேயன் தனது மனதில் இருக்கும் ரஜினி மீதான அபிமானத்தை வெளிப்படுத்தியுள்ள நிலையில், தனுஷ் ஒரே வரியில் தனது வாழ்த்தைப் பதிவு செய்துள்ளார். ரஜினிகாந்தின் படங்களைப் பார்ப்பதில் தனக்கு இருக்கும் ஆர்வம் இன்றுவரை குறையவில்லை என்பதை சிவகார்த்திகேயன் தனது பதிவில் உணர்வுபூர்வமாக வெளிப்படுத்தியுள்ளார். […]

திரைத்துறையில் உறவுகளும் பிரிவுகளும் புதிதல்ல என்றாலும், சமீபத்திய ஒரு செய்தி சமூக வலைத்தளங்களில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி வருகிறது. தமிழ் திரையுலகின் முன்னணி நடிகருமான தனுஷும், பாலிவுட் நடிகை மிருணாள் தாக்கூரும் விரைவில் திருமணம் செய்துகொள்ளப் போகிறார்கள் என்ற வதந்தி தற்போது இணையத்தில் பரவி வருகிறது. இருவருக்கும் இடையே நெருங்கிய உறவு இருப்பதாக கடந்த சில மாதங்களாகவே யூகங்கள் நிலவி வருகின்றன. அந்த வகையில் தற்போது தனுஷ் – மிருணாள் […]

தென் இந்திய சினிமா உலகில் மிக விலையுயர்ந்த வீடு வைத்திருக்கும் நட்சத்திரம் யார் தெரியுமா? எந்தெந்த நடிகர்கள் விலை மதிப்புமிக்க வீடுகளை வைத்திருக்கிறார்கள்? மேலும் ரூ.150 கோடி மதிப்புள்ள வீட்டில் வசிப்பது யார் தெரியுமா? தென் இந்திய திரையுலகில் பல நடிகர்கள் கோடி மதிப்புடைய சொத்துகளை வைத்திருந்தாலும், அதில் தனுஷ் தனிப்பட்ட இடத்தைப் பெற்றுள்ளார். சென்னை போயஸ் கார்டன் பகுதியில், ரஜினிகாந்த் வீட்டுக்கு அருகில் அமைந்துள்ள அவரது பங்களா சுமார் […]

பாலிவுட்டில் பிரபல நடிகையாக வலம் வரும் நடிகை மிருணால் தாக்கூர், தெலுங்கிலும் பிசியான வலம் வருகிறார்.. தமிழ் சினிமாவில் அவர் நடிக்காவிட்டாலும், தெலுங்கில் வெளியான சீதா ராமம் படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.. சீதா ராமம், ஹாய் நன்னா போன்ற படங்கள் தமிழ் ரசிகர்களையும் கவர்ந்தன.. இந்த நிலையில் நடிகை மிருணால் தாக்கூர் நடிகர் தனுஷுடன் டேட்டின் செய்வதாக தகவல்கள் பரவி வருகின்றனர்.. மிருணாலும் தனுஷும் […]