fbpx

விஜயகாந்த் திரைப்பட பாணியில் ஊசி மூலம் உடலில் காற்றை ஏற்றி கொலை..!! காவலுக்கு காத்திருந்த மாமியார், மருமகள்..!!

திருச்சி மாவட்டம் சஞ்சீவி நகர் வாடாமல்லி தெருவைச் சேர்ந்த சுந்தரம் என்பவரது மகன் குணா (34). ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். போதைக்கு அடிமையான குணா, தினமும் குடித்துவிட்டு மனைவி சுலோச்சனா மற்றும் தாய் காமாட்சி ஆகியோரிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். அப்படி, நேற்று முன்தினம் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்த குணா, மீண்டும் தனது மனைவி, தாயிடம் தகராறில் ஈடுபட்டுள்ளார்.

அதன் பிறகு வீட்டிற்குள் சென்று தூங்கியுள்ளார். அப்போது, காமாட்சியின் உறவினர்களான திருநங்கை விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ (19), திருநங்கை குபேந்திரன் என்கிற நிபுயா (19) மற்றும் விஜயகுமார் (48) ஆகிய மூவரும் குணசேகரனின் வீட்டுக்கு வந்துள்ளனர். இதையடுத்து, வீட்டிலிருந்த காமாட்சியும், சுலோச்சனாவும் வீட்டிற்கு வெளியில் வந்து யாரும் வராமல் காவல் காத்துள்ளனர். உள்ளே சென்ற அவர்கள் மூவரும், ராஜ்ஜியம் என்ற விஜயகாந்த் திரைப்படத்தில் வருவது போல, குணசேகரனின் உடலில் காலி ஊசியை செலுத்தியுள்ளனர்.

பின்னர், மூவரும் துப்பட்டாவால் குணசேகரனின் கழுத்தை நெறித்து கொலை செய்துள்ளனர். இதையடுத்து, உடலை தூக்கில் தொங்கவிட்டு நாடகம் ஆடியுள்ளனர். இதனைத் தொடர்ந்து, காமாட்சி கோட்டை காவல் நிலையத்தில் தனது மகன் தற்கொலை செய்து கொண்டதாக புகாரளித்துள்ளனர். இதையடுத்து, சடலத்தை கைப்பற்றிய போலீசார், பிரேத பரிசோதனைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனையின் முடிவில்தான் இந்த கொலை சம்பவம் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

மேலும் குணாவின் எதிர் வீட்டில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தபோது, 12 மணிக்கு மேல் 2 திருநங்கைகள் மற்றொரு நபர் என 3 பேர் வீட்டிற்குள் செல்வதும் மனைவி சுலோச்சனா மற்றும் தாய் காமாட்சி ஆகியோர் வீட்டு வாசலில் அமர்ந்திருப்பதும் தெரியவந்தது. அதன்பேரில் இது தற்கொலை அல்ல கொலை என்பது உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கோட்டை காவல் நிலைய போலீசார் காமாட்சி, சுலோச்சனா, விக்கி என்கிற லித்தின்யா ஸ்ரீ, குபேந்திரன் என்கிற நிபுயா, விஜயகுமார் ஆகிய 5 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

Read More : ”என் வாழ்க்கை உன் அன்பாலும், முத்தங்களாலும் நிரம்பியுள்ளது”..!! மகளுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன அல்லு அர்ஜுன்..!!

English Summary

The three killed Gunasekaran by strangling him with a dupatta. They then hung his body and staged a drama.

Chella

Next Post

நாளை இண்டர்வியூ.. அழைக்கும் Cognizant நிறுவனம்.. சென்னை கோவையில் வேலைவாய்ப்பு..!!

Fri Nov 22 , 2024
One of the leading IT company Cognizant has released a new recruitment notification.

You May Like