fbpx

அவ கூட பழகுவதை நிறுத்து.. சொல்லியும் கேக்கல.. மனைவியின் பாய் ஃபிரண்டை தீர்த்து கட்டிய கணவன்..!!

தேன்கனிக்கோட்டை அருகே, தகாத உறவு விவகாரத்தில் கார் டிரைவர் வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டம், தேன்கனிக்கோட்டை அருகே உள்ள கிரிசெட்டிப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பா மகன் நரசிம்மன் (30), இவர் எலக்ட்ரீசியன் ஆன பணி புரிந்து வருகிறார்.. இவரது மனைவி பாரதி (25). இவர்களுக்கு இரண்டு மகன்கள் உள்ளனர். இந்த நிலையில் பாரதிக்கும் அதே பகுதியை சேர்ந்த முருகேசன் (28) என்பவரும் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இது நாளடைவில் கள்ள காதலாக மாறியது. இருவரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்து வந்துள்ளனர்.

இந்த விஷயம் நரசிம்மனுக்கு தெரியவரவே பாரதியை கண்டித்துள்ளார். இந்நிலையில் நேற்று மாலை, முருகேசன் கிரிசெட்டிப்பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது, அங்கு வந்த நரசிம்மன், முருகேசனிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கழுத்து, தலை பகுதியில் சரமாரியாக வெட்டியதில், அவர் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். பின்னர் நரசிம்மன் அங்கிருந்து தப்பிச் சென்றார். கத்தியால் வெட்டப்பட்ட முருகேசன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார்.

இதுகுறித்து தகவலறிந்த தேன்கனிக்கோட்டை டிஎஸ்பி ஆனந்தராஜ் மற்றும் கெலமங்கலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர். இறந்து கிடந்த முருகேசனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து தப்பியோடிய நரசிம்மனை கெலமங்கலம் போலீசார் கைது செய்து, அவர் மீது கொலை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read more ; ”சினிமா வேறு அரசியல் வேறு”..!! ரோட்ல போற சின்னைப் பையன் என்னைப் பார்த்து முறைக்குறான்..!! போஸ் வெங்கட் கதறல்..!!

English Summary

Near Dhenkanikottai, a car driver was hacked to death due to an inappropriate relationship.

Next Post

டிசம்பரில் எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 5 ராசிகள் இவை தான்.. பணம் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படுமாம்..

Wed Nov 27 , 2024
In this post, we will see which zodiac signs should be careful in December.

You May Like