fbpx

உனக்கு எங்க வீட்டு பொண்ணு கேக்குதா? காதலை கைவிட மறுத்த கல்லூரி மாணவன் கொடூர கொலை..!! – நீதிமன்றம் வழங்கிய அதிரடி தீர்ப்பு

விழுப்புரம் அருகே உள்ள கப்பூர் மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த இளைஞன் ராஜன் (வயது 22). இவர், ஒரு பெண் ஒருவரை காதலிப்பதாக கூறி இருசக்கர வாகனத்தில் பின்தொடர்ந்து சென்று அடிக்கடி தொந்தரவு செய்துள்ளார். இதையறிந்த அப்பெண்ணின் உறவினர், ராஜன் கல்லூரிக்கு செல்லும் போது அவரை வழிமறித்து சாதி பெயரை சொல்லி தகாத வார்த்தையால் திட்டி தாக்கினார்.

அதன்பின்னர், அன்றைய தினம் மாலை பெண்ணின் உறவினரான சரவணன் என்கிற லாலிகார்த்திக், ராஜனை செல்போனில் தொடர்புகொண்டு மதியம் நடந்த பிரச்சினைக்கு சமாதானம் பேச ஒருகோடி கிராம சிவன் கோவில் அருகே வருமாறு அழைத்துள்ளார். அதன்பேரில் அங்கு சென்ற ராஜனுக்கு லாலிகார்த்திக், சத்தியராஜ் ஆகிய இருவரும் மது வாங்கி கொடுத்தனர். பின்னர் போதையில் இருந்த ராஜனை மதுபாட்டிலை உடைத்து முகத்தில் குத்தியதோடு கருங்கல்லால் அவரது முதுகு, மார்பு ஆகிய இடங்களிலும் தாக்கி கொலை செய்தனர்.

இச்சம்பவம் குறித்து பாதிக்கப்பட்ட இளைஞனின் தந்தை முனியன், காணை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். புகாரின் பேரில் இந்த வழக்கில் சம்மந்தப்பட்ட 3 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இந்நிலையில் இவ்வழக்கில் அனைத்து சாட்சிகள் விசாரணை முடிந்த நிலையில்  தீர்ப்பு கூறப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி பாக்கிய ஜோதி, குற்றம் சாட்டப்பட்ட லாலிகார்த்திக், சத்தியராஜ் ஆகிய இருவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்தும், ரவீந்திரனை இவ்வழக்கில் இருந்து விடுதலை செய்தும் தீர்ப்பு கூறினார்.

Read more ; நண்பனின் மனைவியுடன் அடிக்கடி உல்லாசம்.. உச்சத்திற்கு சென்ற தகாத உறவு.. இளைஞர் பரிதாப பலி..!!

English Summary

A college student who refused to give up love was brutally murdered near Villupuram

Next Post

Job Alert : டைப்ரைட்டிங் தேர்ச்சி பெற்றவரா? TNPSC வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பு..! - உடனே விண்ணப்பிங்க

Sun Dec 1 , 2024
Tamil Nadu Department of Employment and Training has released a special competitive exam for typing jobs
#Just In..!! தொடர் கனமழை எதிரொலி..!! தேர்வுகள் ஒத்திவைப்பு..!! தேர்வு வாரியம் முக்கிய அறிவிப்பு..!!

You May Like