fbpx

‘அந்த மனசு தான் சார் கடவுள்’ ஃபெஞ்சல் புயல் நிவாரண நிதியாக ரூ.10 லட்சம் வழங்கிய சிவகார்த்திகேயன்..!!

ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழை பாதிப்புகளுக்கு தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்கு உதவும் விதமாக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் வழங்கியுள்ளார் நடிகர் சிவகார்த்திக்கேயன்.

இது தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவு: “ஃபெஞ்சல் புயல் – கனமழையைத் தொடர்ந்து தமிழ்நாடு அரசு மேற்கொண்டு வரும் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதி’-க்கு திரைப்பட நடிகர் சிவகார்த்திகேயன், ரூ.10 லட்சத்துக்கான காசோலையை இன்று நம்மிடம் வழங்கினார். அவருக்கு என் அன்பும், நன்றியும்” என தெரிவித்துள்ளார். ஃபெஞ்சல் புயல் பாதிப்புக்கு முதல் ஆளாக திரையுலகிலிருந்து சிவகார்த்திகேயன் நிதி வழங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக, தமிழக அரசு தரப்பில், “ஃபெஞ்சல் புயலால், தமிழ்நாட்டின் 14 மாவட்டங்கள் இதுவரை கண்டிராத அளவுக்கு பாதிப்பை சந்தித்து இருக்கின்றன. இதனால் ஒன்றரை கோடி பேர் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். 2 லட்சத்து 11 ஆயிரம் ஹெக்டேர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன” என தெரிவிக்கப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

Read more ; “வீட்டுக்கு வா, நானே கல்யாணம் பண்ணி வைக்கிறேன்” ஆசையாய் சென்ற வாலிபர்.. நெல்லையை உலுக்கிய கொடூர சம்பவம்…

English Summary

Actor Sivakarthikeyan presented Rs 10 lakh to Deputy Chief Minister Udayanidhi Stalin as a relief fund for Fenchal storm and heavy rains.

Next Post

பாத்ரூமில் மணமகன் செய்த காரியம்; ஆத்திரத்தில் திருமணத்தை நிறுத்திய பெண் வீட்டார்..

Wed Dec 4 , 2024
marriage-was-stopped-after-seeing-the-groom-in-toilet

You May Like