செங்கல்பட்டு மாவட்டத்தில் அமைந்துள்ள குடைவரை கோவிலான சிங்கப்பெருமாள் கோவில் ஒரு குன்றின் மீது அமைந்துள்ளது. இக்கோவில் 8 ஆம் நூற்றாண்டில் பல்லவர்களால் கட்டப்பட்டது. பல தனித்துவம் வாய்ந்த இந்தக் கோவிலை வாழ்வில் ஒருமுறையாவது சென்று தரிசிப்பது சிறப்பாகும்.
கோயில் அமைப்பு : சிங்கப்பெருமாள் கோவிலின் கருவறை குகைக்குள் அமைந்துள்ளது. இக்கோவிலுக்கு 500 படிகட்டுகள் ஏறி மேலே செல்ல வேண்டும். இக்கோவிலில் உள்ள உக்ர நரசிம்மர் அமர்ந்த கோலத்தில் சங்கையும், சக்கரத்தையும் கையில் ஏந்தியவாறு காட்சி தருகிறார். இக்கோவிலுக்கு உள்ள சிறப்பு என்னவென்றால், பக்தர்கள் நரசிம்மரின் மூன்றாவது கண்ணை தரிசிக்கலாம்.
நரசிம்மரின் நெற்றிக்கண்ணை தரிசிப்பதால், வாழ்வில் உள்ள துன்பங்கள், இன்னல்கள் விலகும் என்று பக்தர்களால் நம்பப்படுகிறது. இங்கே அஹோபிலவல்லியாக லஷ்மி தேவி காட்சியளிக்கிறார். பக்தர்கள் நரசிம்மரை சுற்றிவர வேண்டும் என்று எண்ணினால் மலையை சேர்த்து சுற்றிவர வேண்டும். இக்கோவிவில் ‘கிரி பிரதக்ஷணம்’ மிகவும் பிரபலமாகும்.
பலன்கள் : சிங்கப்பெருமாள் கோவிலில் உள்ள உக்ர நரசிம்மரை வழிப்பட்டால், கடன் தொல்லை, வழக்கு பிரச்னை, செவ்வாய் தோஷத்தால் ஏற்படும் திருமணத்தடை, சனி மற்றும் ராகு தோஷங்கள் நீங்கும். இங்கே உள்ள அழிஞ்சல் மரத்தில் தொட்டில் கட்டி குழந்தை வரம் வேண்டினால் குழந்தை பேருக்கிட்டுவதாகவும், நெய் விளக்கேற்றி வழிப்பட்டால், கல்வியில் சிறந்து விளங்குவதாகவும் சொல்லப்படுகிறது.
Read more ; தப்பி தவறியும் இந்த பொருட்களை இரவில் யாருக்கும் கொடுக்காதீங்க.. தரித்திரம் வந்து சேரும்!!