fbpx

தமிழ்நாட்டில் இடி, மின்னலுடன் வெளுத்து வாங்கப் போகும் மழை..!! 7 நாட்களுக்கு சம்பவம் இருக்கு..!!

தமிழ்நாட்டில் 7 நாட்களுக்கு இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதனை ஒட்டிய பகுதிகளின் மேல், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவி வருகிறது. இதனால், தமிழ்நாட்டில் ஒருசில இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் இன்றும், நாளையும் (டிசம்பர் 5, 6) இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் வரும் 7ஆம் தேதி முதல் 10ஆம் தேதி வரை லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் கடலோர தமிழகத்தில் ஒருசில இடங்களிலும், உள் தமிழகத்தில் ஓரிரு இடங்களிலும், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளிலும் டிசம்பர் 11ஆம் தேதி லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மீனவர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு அரபிக்கடலின் வடக்கு பகுதிகள், அதனையொட்டிய மத்திய கிழக்கு, தென்மேற்கு அரபிக்கடல் பகுதிகளில் சூறாவளிக்காற்று மணிக்கு 35 – 45 கிமீ வேகத்திலும் இடையிடையே 55 கிமீ வேகத்திலும் வீசக்கூடும் என்றும் இதனால், இப்பகுதிகளுக்கு இன்று மீனவர்கள் செல்ல வேண்டாம் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Read More : வீட்டிலுள்ள பொருட்களே போதும்..!! உங்கள் உதடுகளை மென்மையாக மாற்ற சூப்பர் டிப்ஸ்..!!

English Summary

The Meteorological Department has said that light to moderate rain with thunder and lightning is likely to occur in Tamil Nadu for 7 days.

Chella

Next Post

SBI வங்கியில் வேலை.. 86 ஆயிரம் சம்பளம்.. பிஇ, பிடெக் முடித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்..!! செம சான்ஸ்..

Thu Dec 5 , 2024
Public Sector Banks are filling the vacancies through written test, interview etc. In that way, State Bank of India has released the vacancies for Special Officers.

You May Like