fbpx

பொங்கலுக்கு முன்னதாகவே வங்கிக் கணக்கில் ரூ.2,000 வரவு..!! யாருக்கெல்லாம் கிடைக்கும்..? வெளியான செம குட் நியூஸ்..!!

பொங்கல் பரிசுத் தொகுப்பு தொடர்பான அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு அனைத்து ரேஷன் அட்டைதாரர்களுக்கும் பொங்கல் பரிசுத்தொகை ரூ.1,000 வழங்கப்படும் என்று கூறப்படுகிறது. மத்திய, மாநில அரசு ஊழியர்கள், வருமான வரி செலுத்துவோர் பொதுத்துறை நிறுவனங்களில் பணிபுரிவோர் என அனைவருக்குமே ரூ.1,000 வழங்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அதேபோல், தகுதியுள்ள குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 உரிமைத்தொகை 15ஆம் தேதி வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் இம்மாதம், பொங்கல் திருநாளுக்கு முன்னதாகவே, அதாவது மாத தொடக்கத்திலேயே பெரும்பாலும் வரவு வைக்கப்படும் அல்லது 10ஆம் தேதிக்கு முன்னதாகவே வரவு வைக்கப்படும் என்று கூறப்படுகிறது.

கடந்த 2022இல் மொத்தம் 21 பொருட்கள் அடங்கிய பரிசுப்பொருட்கள் வழங்கப்பட்டன. 2023இல் பரிசு பொருட்களில் மாற்றம் செய்யப்பட்டது. பச்சரிசி, சர்க்கரை, கரும்பு உள்ளிட்டவை வழங்கப்பட்டது. அதோடு வழங்கப்படாத மற்ற பொருட்களுக்காக 1,000 ரூபாய் பணம் வழங்கப்பட்டது. அந்த வகையில், இந்தாண்டு கரும்பு வழங்கப்படும் என்றும் இதற்காக ரூ.238.92 கோடி செலவிடப்படுகிறது என்று அறிவிக்கப்பட்டது.

Read More : ஹீமோகுளோபின் அளவு கம்மியா இருக்குன்னு டாக்டர் சொல்லிட்டாரா..? கவலைய விடுங்க..!! இதை மட்டும் சாப்பிடுங்க போதும்..!!

English Summary

The announcement regarding the Pongal gift set is expected to be officially made soon.

Chella

Next Post

Tn Govt: வார இறுதி நாட்கள்.. சென்னையில் இருந்து 420 சிறப்பு பேருந்துகள் இயக்க தமிழக அரசு முடிவு...!

Fri Dec 6 , 2024
Weekends.. Tamil Nadu government decides to run 420 special buses from Chennai

You May Like