மொத்தமாக காலியாகும் ஓபிஎஸின் கூடாரம்..! சொந்த மாவட்ட உறுப்பினர்களே எடப்பாடிக்கு ஆதரவு..!

ஓ.பன்னீர்செல்வத்தின் ஆதரவு பொதுக்குழு உறுப்பினர்கள் 9 பேர் இன்று, எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

அதிமுக ஒற்றைத் தலைமை விவகாரம் உச்சம் பெற்றிருக்கக் கூடிய நிலையில், கடந்த 23ஆம் தேதி நடைபெற்ற பொதுக்குழுவின்போது, எடப்பாடிக்கு 2,190 பொதுக்குழு உறுப்பினர்கள் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, ஓபிஎஸ் ஆதரவு நிலைப்பாட்டில் இருந்த உறுப்பினர்கள் படிப்படியாக எடப்பாடி ஆதரவு நிலைக்கு திரும்பினர். நேற்று வரை எடப்பாடி பழனிசாமிக்கு, 2,443 பேர் ஆதரவு தெரிவித்திருந்தனர். இதனைத் தொடர்ந்து, இன்று ஓ.பன்னீர்செல்வத்தின் சொந்த மாவட்டமான தேனியில் இருந்து மேலும் 9 பொதுக்குழு உறுப்பினர்கள் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து ஆதரவு தெரிவித்தனர். இதன்மூலம் ஈபிஎஸ்-க்கு ஆதரவு எண்ணிக்கை 2,452ஆக அதிகரித்துள்ளது.

image

இதனால், ஓ.பன்னீர்செல்வத்துக்கு பொதுக்குழு உறுப்பினர்களின் ஆதரவு எண்ணிக்கை மேலும் குறைந்துள்ளது. தேனி மாவட்ட பொருளாளர் சோலை ராஜா, மகளிர் அணி செயலாளர் தனலட்சுமி, கம்பம் முன்னாள் ஒன்றிய செயலாளர் இளையநம்பி உள்ளிட்டோர் முன்னாள் எம்ல்ஏ எஸ்.டி.கே.ஜக்கையன் தலைமையில் ஆதரவு தெரிவித்தனர். இதுவரை தேனி மாவட்டத்தில் மொத்தமுள்ள 62 பொதுக்குழு உறுப்பினர்களில் 42 பேர் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

Chella

Next Post

சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா சுங்கச்சாவடி ஊழியர்களை சுற்றி வளைத்ததால் பரபரப்பு..!

Sat Jul 9 , 2022
திருச்சி சுங்கச் சாவடியில் சசிகலா சென்ற கார் கண்ணாடி மீது தானியங்கி தடுப்பு விழுந்து கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டதால், அவரது ஆதரவாளர்கள் சுங்கச் சாவடியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. அரசியல் பயணமாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் சசிகலா, அதன் ஒரு பகுதியாக, நேற்று சென்னையில் இருந்து திருச்சி வழியாக காரில் தஞ்சைக்கு சென்று கொண்டிருந்தார். இன்று அதிகாலை 2 மணியளவில் திருச்சி துவாக்குடி சுங்கச் சாவடியில் அவர் […]
சுற்றுப்பயணம் மேற்கொண்ட சசிகலா சுங்கச்சாவடி ஊழியர்களை சுற்றி வளைத்ததால் பரபரப்பு..!

You May Like