One Rupee coin: இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயத்தை அச்சிடுவதற்கான விலை அதன் முக மதிப்பை விட அதிகமாக உள்ளது என்று RBI 2018 RTI இல் வெளிப்படுத்தியுள்ளது.
இந்திய நாணயங்கள் மும்பை மற்றும் ஹைதராபாத்தில் உள்ள இந்திய அரசாங்க நாணயக் கழகத்தால் (IGM) அச்சிடப்படுகின்றன. இந்தியாவில் ஒரு ரூபாய் நாணயத்தை அச்சிடுவதற்கான செலவு அதன் உண்மையான மதிப்பை விட அதிகமாக இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) 2018ஆம் ஆண்டு வெளியிட்ட தகவலின்படி, ஆர்டிஐ-ல் கேட்கப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் விதமாக, ஒரு ரூபாய் நாணயத்தின் உற்பத்தி செலவு ரூ.1.11 என தெரிவித்தது.
உற்பத்திச் செலவுகள் மற்றும் முகமதிப்பு ஆகியவற்றுக்கு இடையேயான வேறுபாடு மற்ற நாணயங்களிலும் உள்ளது. ரூ.2 நாணயம் தயாரிப்பதற்கு ரூ.1.28 செலவாகும். அதேபோல், ரூ.5 நாணயம் தயாரிக்க 3.69 ரூபாயும், ரூ.10 நாணயம் தயாரிக்க 5.54 ரூபாயும் உற்பத்தி செலவாகிறது. 21.93 மிமீ விட்டம், 1.45 மிமீ தடிமன் மற்றும் 3.76 கிராம் எடை கொண்ட ஒரு ரூபாய் நாணயம் துருப்பிடிக்காத எஃகு மூலம் தயாரிக்கப்படுகிறது.
இந்தியாவில், கரன்சி அச்சடிக்கும் பொறுப்பு, அரசுக்கும் இந்திய ரிசர்வ் வங்கிக்கும் இடையே பிரிக்கப்பட்டுள்ளது. நாணயங்கள் மற்றும் ரூ.1 நோட்டு பிரத்தியேகமாக இந்திய அரசால் அச்சிடப்பட்டது. அதேபோல், ரூ.2 முதல் ரூ.500 வரையிலான நோட்டுகள் இந்திய ரிசர்வ் வங்கியால் அச்சிடப்பட்டது. ரிசர்வ் வங்கியால் அச்சடிக்கப்பட்ட ரூ.2,000 நோட்டுகள் தற்போது புழக்கத்தில் இருந்து திரும்பப் பெறப்பட்டுள்ளன.
நோட்டுகளை அச்சிடுவதற்கான விலை, மதிப்பின் அடிப்படையில் மாறுபடும். 10 ரூபாயின் 1,000 நோட்டுகளை அச்சிடுவதற்கு தோராயமாக ரூ.960 செலவாகும். அதேபோன்று ரூ.100 நோட்டுகளின் விலை ரூ.1,770 ஆகும். 200 ரூபாய் 1,000 நோட்டுகள் தயாரிப்பதற்கு ரூ.2,370ஆகவும், ரூ.500 நோட்டுகளுக்கு சுமார் ரூ.2,290 ஆகும். சுவாரஸ்யமாக, ரூ.2000 நோட்டுகள் நிறுத்தப்படுவதற்கு முன்பு அதை அச்சிடுவதற்கு தோராயமாக ரூ.4 செலவானது. இந்த வெளிப்பாடு நாணய உற்பத்தியில் உள்ள சிக்கல்கள் மற்றும் செலவுகளை எடுத்துக்காட்டுகிறது. நாணயங்கள் மற்றும் நோட்டுகளின் முகமதிப்பு அவற்றின் வாங்கும் சக்தியைக் குறிக்கும்.
Readmore: போர் வீரர்களுக்கு மரியாதை!. இன்று தேசிய ஆயுதப்படை கொடிநாள்!.