ஔவையார் விருது” பெற சேலம் மாவட்டத்தில் தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதுகுறித்து, சேலம் மாவட்ட ஆட்சியர் தனது செய்தி குறிப்பில்; பெண்களின் முன்னேற்றத்திற்கு சிறந்த சேவை புரிந்தமைக்கு 2025-ஆம் ஆண்டில் உலக மகளிர் தின விழாவில் “ஔவையார் விருது” வழங்கிட கருத்துருக்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பதாரர்கள் தங்களது கருத்துக்களை 31.12.2024 தேதிக்குள் https://awards.tn.gov.in விருதுகள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து மாவட்ட ஆட்சியர் வளாகம், முதல் தளம், அறை எண்.126, மாவட்ட சமூக நல அலுவலகத்தில் கருத்துருக்களை இரண்டு நகல்களுடன் சமர்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது.
விருது பெறுவதற்கு தமிழ்நாட்டை பிறப்பிடமாக கொண்டவராகவும், 18 வயதிற்கு மேற்பட்டவராகவும் இருத்தல் வேண்டும். குறைந்தபட்சம் 5 ஆண்டுகள் சமூக நலன் சார்ந்த நடவடிக்கைகள், பெண் குலத்திற்கு பெருமை சேர்க்கும் வகையிலான நடவடிக்கை, மொழி, இனம், பண்பாடு, கலை, அறிவியல், நிர்வாகம் போன்ற துறைகளில் மிக சிறந்து விளங்கும் மகளிராக இருத்தல் வேண்டும். குறிப்பாக, பெண்களுக்கான இச்சமூக சேவையை தவிர்த்து வேறு சமூக சேவைகள் இவ்விருதிற்கு ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.
தங்களது கருத்துருக்களில் பொருளடக்கம் மற்றும் பக்க எண் (INDEX), உயிர் தரவு (Bio Data), சுயசரிதை மற்றும் Passport size photos (2), ஒரு பக்கம் தனியரை பற்றிய விவரம் (Bulletin points), தமிழ் மருதம் மற்றும் ஆங்கிலம் Verdana, தேசிய மற்றும் உலகளாவிய விருது பெற்றிருப்பின் அதன் விவரம், விருதின் பெயர். யாரிடமிருந்து பெற்றது. பெற்ற வருடம், விருது பெற்றதற்கான காரணம் தெரிவிக்க வேண்டும். மேலும், கையேட்டில் விருது பெற்ற புகைப்படம். சான்றிதழ் இணைக்கப்பட வேண்டும் மற்றும் பக்கங்களுக்கு குறிப்பு வைக்கவும்.
அதேபோன்று, புகைப்படத்துடன் சேவை பற்றிய செயல்முறைவிளக்கம், சேவை பாராட்டி பத்திரிக்கை செய்தி தொகுப்பு. சமூக சேவையாளரின் அல்லது சமூக சேவை நிறுவனத்தின் சேவை மூலமாக பயனாளிகள் பயனடைந்த விவரம் குறிப்பிட வேண்டும். மேலும், தொண்டு நிறுவனத்தின் பகிர்வு, உரிமம். ஆண்டறிக்கை மற்றும் சமூகப் பணியாளர் இருப்பிடத்தில் அருகில் உள்ள காவல் நிலையத்திலிருந்து பெறப்பட்ட குற்றவியல் நடவடிக்கைகள் ஏதும் இல்லை என்பதற்கான சான்று இணைக்கப்பட வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.