fbpx

“ஆட்சியிலும் அதிகாரத்திலும் பங்கு” விரைவில் பிரச்சாரம்..!! 6 மாத சஸ்பெண்ட்க்கு மத்தியில் ஆதவ் அர்ஜூனாவின் அடுத்த மூவ்..!!

வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனாவின் நிறுவனம் சார்பில் “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” நூல் வெளியீட்டு விழா, சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராக தவெக தலைவர் விஜய் கலந்துகொண்டு, அந்த நூலை வெளியிட்டிருந்தார். அந்த விழாவில், திருமாவளவன் முதலில் கலந்து கொள்வதாக இருந்து பிறகு திடீரென விலகினார்.. திமுகவின் அழுத்தம் காரணமாக திருமா கூட்டத்தில் பங்கேற்காமல் விலகியதாக கூறப்படுகிறது.

இந்த விழாவில் விசிக துணை பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா கலந்து கொண்டு பேசினார். அதேபோல, “விடியல் நிச்சயம் உண்டு” என்ற விசிக தலைவர் திருமாவளவனின் எழுத்துக்களையும் சேர்த்து ஆதவ் அர்ஜுனா தன்னுடைய சோஷியல் மீடியாவில் பதிவிட்டிருந்த எழுத்துக்கள், பலரது கவனத்தையும் திரும்பி பார்க்க வைத்தது. அதனைத்தொடர்ந்து, அவரைக் கட்சியிலிருந்து நீக்க வேண்டும் என எதிர்ப்புக் குரல்கள் வந்தது. அதன் பின்னர் ஆதவ் அர்ஜூனா விசிகவில் இருந்து 6 மாதத்திற்கு இடைநீக்கம் செய்யப்படுவதாக திருமாவளவன் அறிவித்தார்.

இந்நிலையில் ஆதவ் அர்ஜுனா தனது சமூக வலைதள பக்கத்தில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவுக்கு கேப்ஷனாக ‘ஆட்சியிலும் பங்கு, அதிகாரத்திலும் பங்கு’ என்ற முழக்கத்துடன் எளிய மக்கள் அதிகாரத்தை அடைவதற்கான பிரச்சாரத்தை மக்கள் சக்தியுடன் விரைவில் தொடங்க உள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் ஆதவ் அர்ஜுனா தனது வாய்ஸ் ஆஃப் காமன்ஸ் நிறுவனத்தின் மூலம் திமுகவுக்கு தேர்தல் பணியாற்றியதையும் தனது ஒன் மைண்ட் இந்தியா நிறுவனத்தின் மூலம் தேர்தல் வியூகங்களை கட்டமைத்ததாகவும் திமுகவுக்கு தேர்தல் யுத்திகளை வகுத்ததாகவும் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பான புகைப்படங்களையும் ஆதவ் அர்ஜுனா தனது வீடியோவில் குறிப்பிட்டுள்ளார். இந்த வீடியோவின் மூலம் திமுகவுக்கும் தனக்கும் எந்த முரண்பாடும் இல்லை என ஆதவ் அர்ஜுனா தெரிவிப்பதாக அரசியல் விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

Read more ; சாலையில் கொட்டிய எண்ணெய் கழிவு.. வழுக்கி விழுந்த வாகன ஓட்டிகள்..!! – சென்னையில் பரபரப்பு

English Summary

“Share in governance and power” campaign soon..!! Aadhav Arjuna’s next move amid 6 month suspension..!!

Next Post

இவர்கள் எல்லாம் பிரட் சாப்பிடவே கூடாது!!!

Tue Dec 10 , 2024
All these people should never eat bread!!!

You May Like