fbpx

தென்காசி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட்..!! – வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தின் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

தென் கிழக்கு வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வுப் பகுதி, தீவிர காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவடைந்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு மேற்கு-வடமேற்கு திசையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் இலங்கை-தமிழக கடலோர பகுதிகளை நோக்கி நகரக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது.

இதன் காரணமாக நேற்று முதல் வடகிழக்கு பருவமழையின் 4-வது சுற்று மழைப்பொழிவு தீவிரம் அடைந்துள்ளது. ஏற்கனவே ,மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சை, ராமநாதபுரம் மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்திருந்தது.இதனால் தமிழ்நாட்டில் டிச.12, 13 மற்றும் 16 ஆகிய தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்காலில் இன்று மிக கனமழைக்கான ஆரஞ்ச் எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

மேலும் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 13 மற்றும் 16ம் தேதிகளில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதன் ஒருபகுதியாக தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பல மாவட்டங்களில் இன்று கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இந்த நிலையில் தமிழகத்தின் தென்காசி, நெல்லை, தூத்துக்குடி ஆகிய மூன்று மாவட்டங்களுக்கு அதி கனமழைக்கான ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது. சென்னை உள்ளிட்ட 17 மாவட்டங்களுக்கு ஆரஞ்ச் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.

Read more ; வங்கதேச இந்து துறவியின் ஜாமின் மனுவை பங்களாதேஷ் நீதிமன்றம் நிராகரித்தது..!!

English Summary

Red alert for heavy rain has been issued for three districts of Tamil Nadu namely Tenkasi, Nellai and Thoothukudi.

Next Post

கோடிகளில் சொத்து.. மும்பையில் 2 அடுக்கு மாடி வீடு.. உலகின் பணக்கார பிச்சைக்காரர் இவர் தான்..!

Thu Dec 12 , 2024
This beggar has assets worth Rs. 7.5 crore and two apartments worth Rs. 1.5 crore.

You May Like