மகிழ் திருமேனி எழுதி இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் படம் விடாமுயற்சி. ஆக்ஷன் – த்ரில்லர் படமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 2025 பொங்கல் பண்டிகைக்கு வெளியாகும் இந்த படத்தில், அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா கசாண்ட்ரா, நிகில் சித்தார்த்தா, ஆரவ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
விடாமுயற்சியின் அப்டேட்க்காக அஜித் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் திடீர் சர்பிரைஸாக படக்குழுவினர் கடந்த மாதம் விடாமுயற்சியின் டீசரை வெளியிட்டனர். வசனங்களே இல்லாமல் வெளிவந்த இந்த டீசர் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் படம் ரிலீசாக இன்னும் சில தினங்களே இருக்கும் நிலையில், விடாமுயற்சி படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைக்கா அடுத்த அப்டேட்டை தற்போது வெளியிட்டுள்ளது.
அதன்படி, ‘விடாமுயற்சி’ திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளதாக அஜித், திரிஷா உள்ளிட்டோர் இருக்கும் புகைப்படத்தோடு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் அஜித் கருப்பு கலரில் உடையணிந்து மாஸாக காட்சியளிக்கிறார். இதனை தற்போது ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.
Read More: ரசிகர்களே ரெடியா?? புஷ்பா 2 ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிப்பு..