உடல் எடையை குறைப்பவர்கள் இந்த தவறை மட்டும் பண்ணாதீங்க..!! இவ்வளவு ஆபத்து இருக்கா..?

உடல் எடையை குறைப்பதற்காக, இரவு உணவை தவிர்த்தால், பல்வேறு உடல் நலப் பிரச்சனைகள் ஏற்படும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

உடல் எடை அதிகமாக இருக்கும்போது விரும்பிய உடைகளை அணிய முடியாது. பொது இடங்களுக்கு செல்லும்போது பல்வேறு சிரமங்களையும் சந்திக்க நேரிடும். பலர் எப்பாடுபட்டாவது தங்களது உடல் எடையை குறைக்க வேண்டும் என பல்வேறு முயற்சிகளை எடுக்கின்றனர். அதில் ஒன்றுதான் இரவு உணவை தவிர்த்துவிட்டு பட்டினி கிடப்பது. ஆனால், இரவு உணவை தவிர்ப்பது குறுகிய கால பலன்களை கொடுத்தாலும், அது நீண்ட காலத்திற்கு பல்வேறு உடல் நலப் பிரச்சனைகளையும் கொடுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

குறிப்பாக, உடல் மெட்டாபாலிசம் எனப்படும் வளர்ச்சிதை மாற்றத்தில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, பசி மற்றும் ஆசைகளையும் அதிகரிக்கும் எனக் கூறுகின்றனர். மேலும், நுண்ணூட்டச் சத்து குறைப்பாட்டை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கின்றனர். அத்துடன் தூக்கமின்மை, உடல் சக்தி குறைபாடு போன்றவையும் ஏற்படும். இரவு உணவை தவிர்க்கும்போது, தேவையற்ற உணவுப் பழக்க வழக்கங்கள் ஏற்படுவதோடு, சரியான நேரத்தில் உணவு எடுத்துக் கொள்ளும் முறையும் பாதிக்கப்படும்.

எனவே, சரிவிகித உணவை சரியான நேரத்தில் எடுத்துக் கொள்வதுதான், உடல் எடையை குறைக்க உதவுவதோடு, உடல் ஆரோக்கியத்திற்கும் சிறந்தது என்று நிபுணர்கள் தெரிவிக்கின்றனர். மேலும், சரியான இடைவெளியில், சரிவிகித உணவை எடுத்துக் கொள்ளும்போது, ரத்தத்தில் சர்க்கரை அளவு சரியான முறையில் சுரப்பதோடு, தேவையற்ற உடல்நலப் பிரச்சனைகள் ஏற்படுவதையும் தவிர்க்கிறது. எனவே, உடல் எடையை குறைக்க, மருத்துவர்களின் உரிய ஆலோசனைகள் இன்றி, நமக்கு நாமே விதித்துக் கொள்ளும் கட்டுப்பாடுகள், குறுகிய காலத்தில் பலன்களை கொடுத்தாலும், அது நீண்ட காலத்திற்கு பிரச்சனையை கொடுக்கும் என்பதே நிபுணர்களின் கருத்தாக இருக்கிறது.

Read More : சவுக்கு சங்கர் வழக்கில் அவசர கதியில் உத்தரவு பிறப்பிப்பு..!! நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிராக திரும்பிய 3-வது நீதிபதி..!!

English Summary

Doctors warn that skipping dinner to lose weight can lead to various health problems.

Chella

Next Post

நீங்கள் அடிக்கடி மது குடிப்பவரா..? இந்த நன்மைகளை அவசியம் தெரிஞ்சிக்கோங்க..!!

Tue Jun 11 , 2024
Abstaining from alcohol for a month can bring many positive changes to your overall health. Now let's see what benefits will come from giving up alcohol for a month.

You May Like