நோய்கள் பெருகி வரும் நிலையில், மக்கள் தங்களின் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்த தொடங்கி உள்ளனர். தங்களின் உடலின் ஆரோக்கியமானது எது என்பதை அறிந்து அதனை பயன்படுத்துகின்றனர். அந்த வகையில் சமையலுக்கு எந்த எண்ணெய் பயன்படுத்துவது நல்லது என்ற சந்தேகம் பலருக்கு இருப்பது உண்டு. குறிப்பாக உடல் எடையை குறைக்க எந்த எண்ணெய் பயன்படுத்தலாம் என்று பலருக்கு சந்தேகம் இருப்பது உண்டு.. அந்த வகையில், எந்த எண்ணெய் உடலுக்கு ஆரோக்கியத்தையும், எடை குறைப்பிலும் உதவும் என்பது குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தற்போது உள்ள காலகட்டத்தில், எண்ணெயில் கூட பல வகைகள் வந்து விட்டது. ஆம், கடலை எண்ணெய், தேங்காய் எண்ணெய், சூரியகாந்தி எண்ணெய், ரைஸ் பிரான் எண்ணெய், ஓலிவ் எண்ணெய், பாமாயில் போன்ற பல வகையான எண்ணெய்கள் சந்தையில் விற்கப்படுவதால் மக்கள் குழப்பம் அடைகின்றனர். இதில் உள்ள ஒவ்வொரு எண்ணெய்க்கும் ஒவ்வொரு குணங்களும், ஒவ்வொரு சத்துக்களும் உள்ளது. அந்த வகையில், ரீபைண்ட் செய்யாத கடலை எண்ணெயில் பல சத்துகள் உள்ளன. இந்த எண்ணெயில், உடலுக்கு தேவையான சத்துக்களான புரதச்சத்து, நல்ல கொழுப்புகள், நார்ச்சத்துகள், சோடியம், பொட்டாசியம், கால்சியம், இரும்பு, மக்னீசியம், வைட்டமின் பி1, வைட்டமின் பி2, நியாசின், வைட்டமின் பி6, ஃபோலேட் உள்ளது.
இதனால் இந்த எண்ணெய்யை தொடர்ந்து நீங்கள் பயன்படுத்துவதால் கூந்தல் வளர்ச்சி, புற்றுநோய் தடுப்பு, சரும பராமரிப்பு, நினைவாற்றல் மேம்பாடு, சர்க்கரை நோய் கட்டுப்பாடு, எடை குறைப்பு என பல வித நன்மைகள் கிடைக்கும். ஆனால் அதற்க்கு நீங்கள் செக்கில் ஆட்டிய கடலை எண்ணெய் தான் பயன்படுத்த வேண்டும். பெரும்பாலான வீடுகளில் பயன்படுத்தப்படும் ஒன்று தான் பாமாயில். இதில் வைட்டமின் ஏ மற்றும் வைட்டமின் ஈ உள்ளது. ஆனால் இந்த எண்ணெய்யை அதிகம் பயன்படுத்தும் போது, பல தீமைகள் ஏற்படும். அதனால் இதை பொறிக்க மட்டும் பயன்படுத்துவது நல்லது.
ரைஸ் பிரான் ஆயிலில் கொலஸ்ட்ரால் இருக்காது. இதில் உள்ள ஆன்டி-ஆக்சிடன்ட்கள், இதய ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது. உடல் எடையை குறைக்க நினைப்பவர்கள் தேங்காய் எண்ணெய் பயன்படுத்தலாம். ஓலிவ் எண்ணெய்யும் நல்ல பலன் தரும். ஆனால் அதன் விலை சற்று அதிகம். இதில் நீங்கள் எந்த எண்ணெய் பயன்படுத்தினாலும் அதிக அளவில் பயன்படுத்தினால் தீமை தான். அதனால் முடிந்த வரை எண்ணெய் பயன்பாட்டை குறைத்துக் கொள்ளுங்கள்.
Read more: உங்க குழந்தைகளுக்கு வாக்கர் பயன்படுத்துறீங்களா? உடனே நிறுத்திவிடுங்கள், எச்சரிக்கும் நிபுணர்கள்!!!