fbpx

டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியல்!. ஜெய்ஸ்வால், ரிஷப் பந்த், கில் முன்னேற்றம்!. கோலி, ரோகித்துக்கு சரிவு!.

Test Cricket Ranking: டெஸ்ட் கிரிக்கெட் தரவரிசை பட்டியலில் இந்திய அணி கேப்டன் ரோகித் சர்மா, விராட் கோலி ஆகியோர் சரிவை சந்தித்துள்ளனர்.

சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலின் டெஸ்ட் தரவரிசை பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது. பேட்ஸ்மேன்களின் தரவரிசை பட்டியலில் இங்கிலாந்து வீரர் ஜோ ரூட் 895 புள்ளிகளுடன் முதலிடத்திற்கு முன்னேறியுள்ளார். நியூசிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் அபாரமாக செயல்பட்டதால், சக வீரரான ஹாரி புரூக்கை பின்னுக்குத் தள்ளி ஜோ ரூட் முதலிடத்திற்கு முன்னேறி அசத்தினார். ஹாரி புரூக் 876 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளார். நியூசிலாந்து வீரர் கேன் வில்லியம்சன் 867 புள்ளிகளுடன் 3-வது இடத்தில் உள்ளார் .

ஆஸ்திரேலியாவின் டிராவிஸ் ஹெட் 5வது இடத்தில் உள்ளார். இலங்கை வீரர் கமிந்து மெண்டிஸ் 6வது இடத்திலும் உள்ளார். இந்திய வீரர்கள் ஜெய்ஸ்வால் 4வது இடத்திலும் , ரிஷப் பண்ட் 9-வது இடத்திலும் , சுப்மன் கில் 16-வது இடத்திலும், விராட் கோலி 20வது இடத்திலும், ரோகித் சர்மா 30-வது வது இடத்திலும் உள்ளனர். டெஸ்ட் கிரிக்கெட் பந்து வீச்சாளர் தரவரிசையில் இந்திய வீரர் பும்ரா முதல் இடத்தில் நீடிக்கிறார். அவரைத்தொடர்ந்து 2-வது இடத்தில் தென் ஆப்பிரிக்க வீரர் ரபாடா உள்ளார்.

20 ஓவர் போட்டி பந்து வீச்சாளர் தரவரிசையில் வெஸ்ட் இண்டீஸ் சுழற்பந்து வீச்சாளர் அகில் ஹூசைன் 3 இடம் உயர்ந்து முதலிடத்தை பிடித்துள்ளார். இதனால் இங்கிலாந்தின் அடில் ரஷித் 2-வது இடத்துக்கு தள்ளப்பட்டார். இதேபோல் 20 ஓவர் போட்டி பேட்ஸ்மேன் தரவரிசையில் ஆஸ்திரேலியா வீரர் டிராவிஸ் ஹெட் முதல் இடத்தில் உள்ளார். அவரைத்தொடர்ந்து இங்கிலாந்து வீரர் பில்ப் சால்ட் உள்ளார்.

Readmore: 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த சந்திப்பு… சீன வெளியுறவு அமைச்சருடன் அஜித் தோவல் என்ன பேசினார்?

Kokila

Next Post

திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது என்ன?. ஆய்வில் அதிர்ச்சி!. காரணம் இதுதான்!

Thu Dec 19 , 2024
Married Women Search: திருமணமான பெண்கள் கூகுளில் அதிகம் தேடுவது அதிர்ச்சியளிப்பதாக பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன. ஒருகாலத்தில் மக்கள் தங்கள் நண்பர்களிடமோ அல்லது உறவினர்களிடமோ ஏதாவது குழப்பம் ஏற்பட்டால் ஆலோசனை கேட்பார்கள். ஆனால் இப்போது, கிட்டத்தட்ட அனைவரிடமும் ஸ்மார்ட் போன் உள்ளது. இந்த ஸ்மார்ட் போன்கள் அனைவரின் சிறந்த நண்பனாக மாறியுள்ளது. அதாவது ஏதேனும் தகவல் தேவைப்பட்டால், உடனடியாக கூகுளில் தேடி பார்த்து அதற்கான பதிலை கண்டறியலாம். பல தேடுபொறிகள் […]

You May Like