fbpx

உங்களுக்கு கவலையும், பதட்டமும் அதிகமா இருக்கா? அப்போ இந்த பதிவு உங்களுக்கு தான்..

தற்போது உள்ள காலகட்டத்தில் தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி பல நேரங்களில் நமக்கு பிரச்சனையையும் மன அழுத்தத்தையும் கொடுத்தாலும், தொழில்நுட்பத்தின் மூலம் மன ஆறுதலும் நிம்மதியும் கிடைப்பதில்லை. பள்ளியில் படிக்கும் சிறு பிள்ளைகள் முதல் வயதான முதியவர்கள் வரை தற்கொலை செய்து கொள்ளும் காரியங்களை நாம் தொடர்ந்து கேள்வி படுகிறோம். இதற்க்கு முக்கிய காரணம், மன அழுத்தம்..

மனிதர்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்வது குறைந்து விட்டது. இதனால் ஆறுதல் அடைய வேறு வழியில்லாமல் தவறான மனிதர்களிடமும், பழக்கத்திற்கும் சென்று விடுகின்றனர். மேலும், இதனால் தற்கொலைகளும் அதிகரித்து விட்டது. மேலும், ஒரு சில எண்ணங்கள் வரும் போது, ஒரு விதமான பயமும் அதன் விளைவாக பதட்டமும் ஏற்படுகிறது. இது போன்ற பயத்தினாலும், பதட்டத்தினாலும் ஒரு மனிதன் தனது வாழ்கையில் உள்ள அனைத்து சந்தோஷத்தையும் இழந்து விடுகிறான்.

மேலும், இது போன்ற அதிக பதடத்தினால் மாரடைப்பு ஏற்பட அதிக வாய்ப்பு உள்ளது. அப்படி கவலையும் மன அழுத்தமும் பதட்டமும் வரும் போது என்ன செய்யலாம் என்பதை இங்கு தெரிந்துகொள்வோம். திடீரென ஏற்படும் பதற்றத்தை குறைக்க, சுவாசபயிற்சிகள் மிகவும் பயனுள்ளதாக இருக்கும். மூச்சை உள்ளிழுப்பதை விட மூச்சுக்கட்டுப்பாடு நீண்டதாக இருக்கும் போது, இதயத்துடிப்பு குறைந்து, நரம்பு மண்டலமும் இணைக்கப்படுகிறது.

இதற்க்கு நீங்கள், ​சுவாசத்தை 4 என்று எண்ணும் வரை உள்ளிழுத்து பிறகு 8 என்று எண்ணிய பிறகு மூச்சை வெளியிட வேண்டும். இப்படி நீங்கள் ஒரு சில நிமிடங்கள் செய்தால், உங்கள் மனதின் பதட்டம் குறைந்து, மனம் அமைதியடையும். முச்சை மூக்கு வழியாக உள்ளிழுத்து நுரையீரலில் காற்றை நிரப்பி பிறகு ஆழமாக உள்ளிழுத்து வாய் வழியாக மூச்சை வெளியிட செய்வதால், உங்களின் பதட்டம் உடனடியாக குறைந்து விடும்.

Read more: வெளிநாடுகளில் தீவிர ஆய்வு.. அந்த அளவிற்கு முருங்கைக்கீரையில் என்ன இருக்கு தெரியுமா..?

English Summary

tips for stress relief

Next Post

அஸ்வின் முதல் ஜேம்ஸ் ஆண்டர்சன் வரை!. 2024-ல் கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற நட்சத்திர வீரர்கள்!

Sat Dec 21 , 2024
Star players: 2024 ஆம் ஆண்டில், கிரிக்கெட்டில் இருந்து விடைபெற்ற மிகச்சிறந்த நட்சத்திர வீரர்கள் குறித்து பார்க்கலாம். 2024/25 பார்டர்-காஸ்வாஸ்கர் டிராபியில், இந்தியாவுக்காக அதிக விக்கெட்டுகளை (343) வீழ்த்திய இந்திய ஜாம்பவான் ரவிசந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து விடைபெற்றார். இந்திய கிரிக்கெட் அணியின் ஆல்ரவுண்டரான சென்னையை சேர்ந்த ரவிச்சந்திரன் அஸ்வின், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் விளையாடிய பிரிஸ்பன் டெஸ்ட் போட்டி […]

You May Like