fbpx

பயங்கரவாதிகள் தாக்குதலில் வீரர்கள் 16 பேர் பலி!. பாகிஸ்தானில் அதிகரிக்கும் பதற்றம்!

Pakistan: பாகிஸ்தான் கைபர் பக்துன்வா மாகாணத்தில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலில் பாதுகாப்புப் படை விரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர்.

பாகிஸ்தான் வட மேற்கு, கைபர் பக்துன்வா மாகாணத்தில் தெற்கு வசீரிஸ்தான் மாவட்டம் அமைந்துள்ளது. இங்குள்ள மக்கீன் என்ற இடத்தில் உள்ள சோதனை சாவடியில் நேற்று காலை 30 பேர் கொண்ட தீவிரவாதிகள் திடீரென தாக்குதல் நடத்தினர். இதில்,பாதுகாப்பு படை வீரர்கள் 16 பேர் கொல்லப்பட்டனர். 8 பேர் படுகாயமடைந்தனர். கடந்த சில மாதங்களில் பயங்கரவாதிகள் நடத்திய மிகப்பெரிய தாக்குதலில் இதுவும் ஒன்று.

அதாவது, இதே மாவட்டத்தில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 2 தீவிரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர். இதற்கு பதிலடியாக நடத்தப்பட்ட தாக்குதலில் 16 வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இதனால், மேலும் அங்கு பதற்றம் அதிகரித்துள்ளது.

Readmore: தியேட்டரில் படம் பிடிக்கவில்லையா?. பாதியில் வெளியேறினால் கட்டணம் திருப்பித் தரப்படும்!. புதிய நடைமுறை அமல்!

Kokila

Next Post

ஆதிதிராவிடர் & பழங்குடியின மகளிருக்கு முத்திரைத்தாள் & பதிவுக் கட்டணத்தில் விலக்கு...! முழு விவரம்

Sun Dec 22 , 2024
Exemption from stamp duty & registration fees for Adi Dravidian & Tribal women

You May Like