பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி தவெக-வில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசியல் களம் தற்போது முதலே 2026ம் ஆண்டு நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது. அதற்கு முக்கிய காரணமாக மாறியிருப்பவர் நடிகர் விஜய். கோடிக்கணக்கான ரசிகர்களை கொண்டுள்ள விஜய், கடந்த பிப்ரவரி மாதம் தமிழக வெற்றி கழகம் கட்சியை தொடங்கினர். பிப்ரவரி மாதம் கட்சியைத் தொடங்கிய விஜய் அக்டோபரில் நடந்த தவெக-வின் முதல் மாநாட்டில் தன்னனுடைய கொள்கைளையும், கோட்பாடுகளையும், செயல் திட்டங்களையும் அறிவித்தார்.
திமுக, பாஜக தன்னுடைய அரசியல் எதிரிகள் என்று தெளிவாக குறிப்பிட்டுள்ள விஜய் அந்த இரு கட்சியினர் தவிர மற்ற கட்சியினர் யாரையும் விமர்ச்சிக்காமல் சட்டசபை தேர்தலை நோக்கி காய் நகர்த்தி வருகிறார். மேலும் கட்சியை கட்டமைக்கும் நோக்கில் நிர்வாகிகள் நியமனம், உறுப்பினர்கள் சேர்க்கையிலும் கவனம் செலுத்தி வருகிறார், தலைமை நிர்வாகிகளையும் அதற்கான பணிகளில் ஈடுபடுத்தி வருகிறார்.
இந்த நிலையில் பெண்களுக்கு மரியாதை இல்லை எனக் கூறி தவெக-வில் இருந்து 20க்கும் மேற்பட்ட பெண் நிர்வாகிகள் விலகியது பெரும் சலசலப்பை ஏற்படுத்தியூள்ளது. அரியலூர் கார்குடி காலனியில் ஏற்றப்பட்டிருந்த அக்கட்சியின் கொரியை இறக்கிய மகளில் அணி நிர்வாகி பிரியதர்ஷினி ஜெயபால் உள்ளிட்டோர் கட்சியிலிருந்து விலகினர். பெண் நிர்வாகிகளின் விலகல் தவெகவுக்கு பின்னடைவை ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது.
Read more ; Alert…! 4 மாவட்டத்தில் நாளை மறுநாள் கனமழை…. சற்றுமுன் வானிலை கொடுத்த எச்சரிக்கை..!