செல்போனை பல மணி நேரம் பயன்படுத்தும் நாம், அதற்க்கு சார்ஜ் செய்வதற்கு மட்டும் மறந்துவிடுவோம். மறப்பது மட்டும் இல்லாமல், எவ்வளவு பயன்படுத்தினாலும் அதன் பேட்டரி ஒருபோதும் குறையக்கூடாது என்று மக்கள் விரும்புவது உண்டு. ஒரு சிலர், குறிப்பாக முதியவர்கள், பேட்டரி கொஞ்சம் குறைந்த உடன், சார்ஜ் செய்வது உண்டு. ஆனால் அது முற்றிலும் தவறு. ஆம், செல்போனை எத்தனை சதவீதம் சார்ஜ் செய்ய வேண்டும் என்பதை பற்றி தெரிந்துக் கொள்ள தொடர்ந்து படியுங்கள்..
உங்கள் செல்போனின் பேட்டரி, நீண்ட நாட்கள் பழுதாகாமல் இருக்க வேண்டும் என்றால், செல்போனில் 20% சார்ஜ் இருக்கும் போது சார்ஜரில் இணைத்து விடுகள். பின்னர், 80-90% வரை சார்ஜ் ஆன உடன் சார்ஜில் இருந்து எடுத்து விடுங்கள். நீங்கள் 0%-வரும் வரை சார்ஜ் செய்யாமல் இருந்துவிட்டு, பிறகு சார்ஜ் செய்தால் அது உங்கள் பேட்டரியை கணிசமாக சூடாக்கி விடும். நீங்கள் பயணம் மேற்கொள்ள வேண்டும் போன்ற காரணங்கள் இருந்தால், நீங்கள் 80% க்கு மேல் சார்ஜ் செய்து கொள்ளலாம்.
ஒரு வேலை நீங்கள் உங்கள் செல்போன் செயல்பாட்டை குறைக்க திட்டமிட்டால், பாதி சார்ஜ் செய்வதே சிறந்த வழி. உங்கள் செல்போன் பேட்டரி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்றால், 50% தான் சார்ஜ் செய்ய வேண்டும் என்று ஆப்பிள் நிறுவனம் பரிந்துரைக்கிறது. செல்போன் வெடிப்பது போன்ற விபத்துக்களை தவிர்க்க, உங்கள் மொபைல் போனின் பேட்டரிகளை ஈரம் இருக்கும் இடங்களான குளியலறை போன்ற இடத்திற்கு எடுத்து செல்ல கூடாது.
மேலும், உள்ளூர் கடையில் கிடைக்கும் மலிவான சார்ஜர்கள் பெரும் ஆபத்தை ஏற்படுத்தும். இதனால் போலி சார்ஜர்களைப் பயன்படுத்துவதை நிறுத்தி விடுங்கள்..
Read more: தொடைக்கு இடையில் உள்ள படர்தாமரை உங்களை பாடாய் படுத்துகிறதா? மூன்றே நாளில் குணமாக சூப்பர் டிப்ஸ்..