ரேஷன் கடைகளில் இனி ஸ்மார்ட் கார்டு இல்லாமல் ரேஷன் பொருட்கள் வாங்கலாம்..? அது எப்படி என்பதை இந்தப் பதிவில் பார்க்கலாம்.
நாடு முழுவதும் ஏழை, எளிய நடுத்தர மக்களுக்கு ரேஷன் கடைகள் மூலம் மானிய விலையில் அரிசி, சர்க்கரை, கோதுமை, பாமாயில் உள்ள பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. இதனால், ஏராளமான மக்கள் பயனடைந்து வருகின்றன. மேலும், மத்திய – மாநில அரசுகளின் நிவாரணம், நிதியுதவி உள்ளிட்டவைகளுக்கு ரேஷன் கார்டு பெரிதும் உதவுகிறது.
அந்த வகையில், தமிழ்நாட்டில் கூட பொங்கல் பண்டிகையின் போது சிறப்பு தொகுப்புடன் வேஷ்டி, சேலையும் வழங்கப்படுகிறது. கைரேகை பதிவு மற்றும் QR கோடுடன் அரசு வழங்கிய ஸ்மார்ட் கார்டை பயன்படுத்தி ரேஷன் கடைகளில் பொதுமக்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இந்நிலையில், அனைத்து துறைகளையும் டிஜிட்டல் மயமாக்கி வரும் மத்திய அரசு, ரேஷன் கடைகளிலும் தற்போது டிஜிட்டல் தொழில்நுட்பத்தை புகுத்தியுள்ளது.
அதாவது, இனி ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு இல்லாமல் பொதுமக்கள் பொருட்களை வாங்கலாம். இதற்காக Mera Ration 2.0 என்ற செயலியை மத்திய அரசு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த செயலியை கூகுள் பிளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ஆப் ஸ்டோரில் பொதுமக்கள் டவுன்லோட் செய்து கொள்ளலாம். இந்த செயலியில் பயனரின் ஆதார் அட்டை எண்ணை உள்ளீடு செய்ய வேண்டும்.
அதன் பிறகு ஆதார் அட்டையுடன் இணைக்கப்பட்டுள்ள மொபைல் நம்பருக்கு ஒரு OTP வரும். அதை அந்த செயலியில் உள்ளீடு செய்தால் உங்களின் ரேஷன் கார்டின் டிஜிட்டல் வடிவம் அந்த செயலியில் தோன்றும். வெள்ளம் போன்ற பேரிடர் காலங்களில் ரேஷன் கார்டு தொலைந்து விட்டாலோ அவசரத்தில் மறந்து வைத்து விட்டாலோ இனி கவலைப்படாமல், இந்த செயலியை பயன்படுத்தி பொருட்களை வாங்கிக் கொள்ளலாம்.
Read More : ”இப்படி செய்தால் வைரஸ் தொற்று நம்மை நெருங்காது”..!! தமிழ்நாட்டில் வினோத திருவிழா..!! எங்கு தெரியுமா..?