fbpx

புரோ கபடி!. அனல்பறந்த அரையிறுதி!. அரியானா, பாட்னா அணிகள் இறுதிப்போட்டிக்கு முன்னேற்றம்!.

11-வது புரோ கபடி லீக் தொடரின் நேற்றைய அரையிறுதி ஆட்டத்தில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி அரியானா அணியும், தபாங் டெல்லியை வீழ்த்தி பாட்னா அணியும் இறுதிப்போட்டிக்குள் நுழைந்தன.

12 அணிகள் இடையிலான 11-வது புரோ கபடி லீக் போட்டி கடந்த அக்டோபர் 18-ம் தேதி ஐதராபாத்தில் தொடங்கியது. இந்த தொடரின் முதற்கட்ட லீக் ஆட்டங்கள் ஐதராபாத்திலும் 2-வது கட்ட லீக் ஆட்டங்கள் நொய்டாவிலும் 3-வது கட்ட லீக் ஆட்டங்கள் தற்போது புனேவிலும் நடைபெற்றன. இந்த லீக் ஆட்டங்கள் முடிவில் 6 அணிகள் பிளே ஆப் சுற்றுக்கு முன்னேறின. புள்ளிப்பட்டியலில் 3 முதல் 6 இடங்களை பிடித்த உ.பி.யோத்தாஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங் பாந்தர்ஸ் அணிகள் நாக் அவுட் சுற்றுக்கு முன்னேறின. அரியானா ஸ்டீலர்ஸ் – தபாங் டெல்லி அணிகள் நேரடியாக அரையிறுதிக்கு தகுதி பெற்றன.

இதில் நேற்றிரவு நடைபெற்ற முதலாவது அரையிறுதி ஆட்டத்தில் அரியானா ஸ்டீலர்ஸ் – உ.பி. யோத்தாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின. விறுவிறுப்பாக நடந்த இந்த ஆட்டத்தில் முதல் பாதியில் அரியானா வெறும் ஒரு புள்ளி மட்டுமே முன்னிலை பெற்றிருந்தது. அடுத்த பாதியில் அரியானா அணி எதிரணியை ஒரு முறை ஆல்-அவுட் செய்து முன்னிலையை அதிகப்படுத்தியது. இதையடுத்து அரியானா 28-25 என்ற புள்ளி கணக்கில் உ.பி. யோத்தாஸ் அணியை வீழ்த்தி தொடர்ந்து 2-வது முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இதேபோல், மற்றொரு ஆட்டத்தில் 3 முறை சாம்பியனான பாட்னா பைரேட்ஸ் அணி 32-28 என்ற புள்ளி கணக்கில் தபாங் டெல்லியை வீழ்த்தி 5-வது முறையாக இறுதி ஆட்டத்துக்கு முன்னேறியது. இதனை தொடர்ந்து நாளை(டிசம்பர் 29) இரவு 8 மணிக்கு நடைபெறும் இறுதிப்போட்டியில் அரியானா ஸ்டீலர்ஸ். பாட்னா பைரேட்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.

Readmore: அடுத்த ஷாக்!. ஜெர்மன் நாடாளுமன்றம் கலைப்பு!. தேர்தல் தேதியை அறிவித்தார் ஜனாதிபதி!

Kokila

Next Post

எச்சரிக்கை!. தலைமுடிக்கு டை அடிக்கிறீர்களா?. புற்றுநோயை உருவாக்கும் அபாயம் அதிகரிப்பு!.

Sat Dec 28 , 2024
Hair dye: இன்றைய நாட்களில் இளம் தலைமுறையினருக்கு பெரும் பிரச்சனையாக இருப்பது இளநரை. இளைஞர்களுக்கு மட்டுமல்லாமல், வயதுக்குவராத சிறுவர், சிறுமிகளுக்கும் இளநரை பெரும் பிரச்சனையாக இருக்கிறது. இளநரையை மறைப்பதற்காக பல வண்ணங்களை பூசிக் கொள்ள இளைஞர்களும், இளம்பெண்களும் விரும்புகிறார்கள் என்றால், சற்று வயதானவர்களும் டை அடிப்பதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். முன்பு சலூன் அல்லது பியூட்டி பார்லர்களுக்கு சென்று டை அடித்தவர்கள், கொரோனா காலத்திற்கு பின்பு வீட்டிலேயே டை அடிக்கத் தொடங்கிவிட்டனர். […]

You May Like