தேமுதிக தலைவர் விஜயகாந்தின் நினைவிடம் நோக்கி பேரணி நடத்த காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர்.
தமிழ்நாட்டின் முன்னாள் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், தே.மு.தி.க. தலைவருமான விஜயகாந்த் முதலாம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாள் குருபூஜையாக அனுசரிக்கப்படும் என்பதால் தே.மு.தி.க. ஏற்கனவே அறிவித்தது.
விஜயகாந்தின் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட தமிழ்நாட்டின் அரசியல் கட்சித் தலைவர்கள் அனைவருக்கும் தே.மு.தி.க. சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. புதிய அரசியல் கட்சித் தலைவராக உருவெடுத்துள்ள பிரபல நடிகர் விஜய்க்கும் முதலாம் ஆண்டு நினைவு நாளில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தலைமையில் மாநில தேர்தல் ஆணையம் அலுவலகத்தில் இருந்து விஜயகாந்த் நினைவிடம் வரை அமைதிப்பேரணி நடத்த திட்டமிடப்பட்டது. இந்த நிலையில் தேமுதிகவின் இந்த பேரணிக்கு காவல்துறையினர் அனுமதி மறுத்துள்ளனர். போக்குவரத்துக்கு நெரிசல், பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படும் என்பதால் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால், தடையை மீறி பேரணி நடத்த தேமுதிக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more ; 2025ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு அரசின் பொது விடுமுறை நாட்கள்..!! எந்த மாதத்தில் அதிக லீவு வருது தெரியுமா..?