fbpx

காவி உடை திருவள்ளுவர் படத்திற்கு மரியாதை செலுத்திய ஆளுநர் ரவி.. வாழ்த்து பதிவில் சொன்ன மெசேஜ் என்ன தெரியுமா? 

தமிழ்நாடு முழுவதும் மாட்டுப் பொங்கல் பண்டிகை திருவள்ளுவர் தினமாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இதனையொட்டி திருவள்ளுவர் சிலைக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உட்பட பல்வேறு தரப்பினரும் மரியாதை செய்து வருகின்றனர். அந்த வகையில் ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் புகைப்படத்திற்கு மரியாதை செலுத்தினார். கடந்த ஆண்டு ஆளுநர் ஆர்.என்.ரவி திருவள்ளுவர் காவி ஆடை தரித்த புகைப்படத்தை வைத்து மரியாதை செலுத்தி இருந்தார். அது சர்ச்சையான நிலையில், நடப்பாண்டிலும் காவி ஆடை தரித்த திருவள்ளுவருக்கு மரியாதை செலுத்தி இருக்கிறார்.

ஆளுநர் மாளிகை எக்ஸ் தளத்தில், பாரதத்தின் தமிழ் போற்றும் தெய்வப்புலவர் திருவள்ளுவரை தேசம் ஆழ்ந்த நன்றியுடனும், மிகுந்த பயபக்தியுடனும் நினைவு கூர்கிறது. பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அவர் ஒவ்வொரு தனிநபருக்கும் அமைப்புக்கும் பொருந்தக்கூடிய ஒப்பற்ற வழிகாட்டியான திருக்குறளை வழங்கினார். பாரதத்தின் சனாதன நாகரிக மரபில், கடவுள் பக்தியின் உன்னதத்தையும், நமது தனிப்பட்ட மற்றும் கூட்டு வாழ்க்கையில் நன்னடத்தையின் ஆழத்தையும் அவர் நமக்குக் கற்றுக் கொடுத்தார்.

சமூகத்தின் அனைத்துப் பிரிவினருக்கும், ஆட்சியாளர்களுக்கும் ஒரு விரிவான நல்லொழுக்கக் குறியீட்டை அவர் வகுத்தார். இன்று நாம் திருவள்ளுவர் தினத்தைக் கொண்டாடும் அதே வேளையில், அவர் நமது அன்றாட வழிகாட்டியாக விளங்கி வருகிறார். எனவே அவர் தினமும் நினைவுகூரப்பட்டு கொண்டாடப்பட வேண்டும். திருவள்ளுவரின் சிறந்த பக்தரான மாண்புமிகு பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி, திருக்குறளின் போதனைகள் இப்போது உலகம் முழுவதும் எதிரொலிக்கின்றன என்று பதிவிடப்பட்டுள்ளது.

Read more : தமிழ்நாட்டில் மீண்டும் வெளுத்து வாங்கப் போகும் கனமழை..!! 18, 19ஆம் தேதிகளில் சம்பவம் இருக்கு..!!

English Summary

Governor Ravi paid respect to Thiruvalluvar in saffron dress.. Do you know what message he said in the congratulatory message?

Next Post

வாடிக்கையாளர்கள் ஜனவரி 23-ம் தேதிக்குள் இதை முடிக்க வேண்டும்.. பிஎன்பி வங்கி முக்கிய அறிவிப்பு..

Wed Jan 15 , 2025
Punjab National Bank, one of India's leading public sector banks, has issued an important announcement to its customers.

You May Like