fbpx

எச்சரிக்கை!!! பிரபல தீம் பார்க்கில், 2 பெண் பிள்ளைகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஊழியர்..

சென்னை அடுத்துள்ள ஈஞ்சம்பாக்கம் பகுதியில், பிரபல தீம் பார்க்கான விஜிபி செயல்பட்டு வருகிறது. வார இறுதி நாட்கள் மற்றும் விடுமுறையின் போது, இங்கு சுற்றுலாப் பயணிகளின் கூட்டம் அலைமோதுவது வழக்கம். குடும்பத்துடன் நேரம் செலவழிக்க, சிறந்த இடமாக பலர் இங்கு வருவது உண்டு. அந்த வகையில், சென்னையைச் சேர்ந்த பெண் ஒருவர், தனது 19 மற்றும் 16 வயது மகள்களுடன் பொங்கல் விடுமுறையின் போது, தீம் பார்க் சென்றுள்ளார். அப்போது அங்கிருந்த நீர் சறுக்கு பகுதியில், அவரது இரண்டு மகள்களும் சறுக்கி விளையாடியுள்ளனர். அப்போது, அங்கு பணியில் இருந்து ஊழியர் ஒருவர், அவரது மகள்களிடம் தவறாக நடந்து கொண்டுள்ளார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்தப் பெண், சம்பவம் குறித்து உடனடியாக விஜிபி நிர்வாகத்திடம் புகார் அளித்துள்ளார். ஆனால் விஜிபி நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதையடுத்து, பாதிக்கப்பட்ட பெண்களின் தாய், இது தொடர்பாக நீலாங்கரை காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், விஜிபி ஊழியரான சுரேந்திரன் என்பவரை கைது செய்துள்ளனர். நதொடர்ந்து நடத்தப்பட்ட விசாரணையில், சுரேந்திரன் தான் பாலியல் தொல்லை கொடுத்ததை ஒப்புக்கொண்டார். இதையடுத்து, சுரேந்தர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு, சிறையில் அடைத்துள்ளனர். இதனிடையே, விஜிபி நிர்வாகத்திடமும் போலீசார் விசாரணை மேற்கொள்ள முடிவு செய்துள்ளனர்.

Read more: மாட்டிறைச்சி சாப்பிடுறீங்க.. கோமியம் மருந்து என சொன்னால் ஏன் எதிர்க்குறீங்க..? – தமிழிசை சௌந்தரராஜன் பேச்சு

English Summary

2 girls was sexually abused in a famous theme park

Next Post

துருக்கி ஹோட்டலில் பயங்கர தீ விபத்து.. 66 பேர் பலி..!! 51 பேர் காயம்..

Tue Jan 21 , 2025
Turkiye: 66 dead, 32 injured after hotel with 234 guests catches fire in Bolu province

You May Like