fbpx

பரபரப்பு.. பஞ்சாபில் தமிழக கபடி வீராங்கனைகள் மீது தாக்குதல்..!! கபடி அரங்கில் மோதல்..! – அதிர்ச்சி வீடியோ

தமிழ்நாட்டின் மதர் தெரதா பல்கலை கழக வீராங்கனைகளுக்கும், பஞ்சாம் மாநிலம் தர்பெங்கா பல்கலைகழக வீராங்கனைகளுக்கும் போட்டியின் போது ஏற்பட்ட மோதலில் தமிழக வீராங்கனைகள் மீது தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான 2024 – 2025 கபாடி போட்டிகள் பஞ்சாப் மாநிலத்தில் நடைபெற்று வருகிறது. இந்த போட்டியில் தமிழ்நாட்டில் இருந்து பாரதியார் பல்கலைக்கழகம், பெரியார் பல்கலைக்கழகம், அன்னை தெரசா பல்கலைக்கழகம், அழகப்பா பல்கலைக்கழகத்தை சேர்ந்த கபாடி வீராங்கனைகள் பங்கேற்று இருந்தனர். காலையில் போட்டிகள் தொடங்கிய நிலையில் விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது.

காலை சுமார் 10:00 மணிக்கு மேல் அன்னை தெரசா பல்கலை., பீகாரின் தர்பங்கா பல்கலைக்கழக அணியினர் இடையே போட்டி நடந்தது. அப்போது, பவுல் பிளே தொடர்பாக பீகார் வீராங்கனைகள் குறித்து தமிழக வீராங்கனைகள் புகார் தெரிவித்ததாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த பீகார் வீராங்கனை ஒருவர், தமிழக வீராங்கனை மீது தாக்குதல் நடத்தியுள்ளார். அதுவும் இருக்கைகளை கொண்டு தாக்கியுள்ளனர்.

இதனால் ஆத்திரமடைந்த பிற தமிழக வீராங்கனைகள் வாக்குவாதம் செய்ய, நடுவருக்கு ஆதரவாக பீகார் தர்பங்கா பல்கலை., மாணவிகள் வந்துள்ளனர். இதனால் ஏற்பட்ட வாக்குவாதம் மோதலாக உருவாகவே, அங்கு பீகார் – தமிழ்நாடு கபடி வீராங்கனைகள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு சூழல் உண்டாகியது. இதுதொடர்பாக வீடியோ வைரலாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டு வீரர்கள் தொடர்ந்து போட்டியில் கலந்து கொள்வது குறித்து அச்சம் தெரிவித்துள்ளனர். 

Read more ; அதிகமாக பால் குடித்தால் இத்தனை ஆபத்தான பிரச்சனைகள் ஏற்படுமா..? சிறுநீரக கல் முதல் இதய நோய்கள் வரை…

English Summary

Attack on Tamil Nadu kabaddi players in Punjab..!!

Next Post

”ரூ.15 லட்சம் கேட்டது உண்மையா”..? ”தைரியமா சொல்லுங்க”..!! புதிய மாவட்ட செயலாளர்களிடம் விஜய் ரகசிய விசாரணை..!!

Fri Jan 24 , 2025
It has been reported that leader Vijay will meet and speak to the new district secretaries of the Tamil Nadu Victory Party separately.

You May Like