fbpx

கோயிலை பாதுகாக்கும் முதலை.. பக்தர்களின் பிரசாதம்தான் உணவு.. கோயிலுக்குள் மறைந்திருக்கும் மர்மம்..!! எங்கே இருக்கு..?

அனந்தபுர ஏரிக் கோவில் தென் இந்தியாவில் கேரள மாநிலத்தின் காசர்கோடு மாவட்டத்தில் ஒரு ஏரியின் நடுவில் அமைந்திருக்கும் ஆலயமாகும். இந்தியாவில் அமைந்துள்ள ஒவ்வொரு கோயிலுக்கும் ஒரு தனி சிறப்பு இருந்து வருகிறது. அந்த வகையில் இந்த கோயிலுக்கு சிறப்பான விஷயமாக கருதப்படுவது 150 வருடங்களாக முதலை இந்த கோயிலை பாதுகாத்து வருவது தான்.

இக்கோவில் கும்பாலா என்ற இடத்தில் இருந்து சுமார் 5 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது. புராணங்களின் கூற்றுப்படி பரந்தாமன் ஸ்ரீ அனந்த பத்மநாபசுவாமி அசலாக முதன்முதலில் குடியிருந்த இடம் இதுவே என்று கூறப்படுகின்றது. 9ஆம் நூற்றாண்டில் கட்டப்பட்ட இந்த சிறப்பு வாய்ந்த கோவிலை சுற்றியும் தலைவாயிலும், பச்சை பசேலென காட்சியும் அமைந்திருப்பது மனதுக்கு பிரமிப்பாக இருக்கிறது. இந்த அமைதியான சூழ்நிலையே இக்கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு மன அமைதியையும், நிம்மதியையும் தருகிறது.

மேலும் இந்த கோயிலில் வற்றாத குளம் ஒன்று உள்ளது. அந்த குளத்தில் 150 ஆண்டுகளாக ஒரு முதலை வாழ்ந்து வருகிறது. இந்த முதலை கோயிலில் படைக்கப்படும் பிரசாதத்தை மட்டுமே உணவாக உண்டு வாழ்ந்து வந்தது. கோயிலை இந்த முதலைதான் பாதுகாத்து வருவதாக பக்தர் களின் நம்பிக்கை. மாமிச உண்ணியான இந்த முதலை, கோயில் குளத்தில் உள்ள மீன்களை கூட சாப்பிட்டது இல்லை. கோயில் அர்ச்சகர் மற்றும் பக்தர்கள் அளிக்கும் பிரசாதத்தை மட்டுமே உண்டு வருகிறது. அதனால், இதை தெய்வீக முதலையாக பக்தர்கள் கருதுகின்றனர்.

இரவு நேரங்களில் குளத்தில் இருந்து கோயில் வளாகத்துக்குள் முதலை வரும். ஆனால், எப்படி இது மீண்டும் குளத்துக்கு போகிறது என்று யாருக்கும் தெரியாது. இந்த முதலைக்கு முன்னதாக ஒரு முதலை கோயில் குளத்தில் இருந்துள்ளது. அந்த முதலை இறந்ததும் அடுத்ததாக ஒரு முதலை வந்து கோயிலை பாதுகாத்து வருகிறது. கோயில் குளத்தை சுற்றிலும் எந்த நீர்நிலைகளும் இல்லாத பட்சத்தில் இந்த முதலைகள் எப்படி இங்கே வருகிறது என்று யாருக்கும் தெரியவில்லை.

Read more : “என்கூட மட்டும் இல்ல, என்னோட நண்பர்கள் கூடவும் நீ உல்லாசமா இருக்கணும்” 55 வயது நபரால் பெண்ணிற்கு நேர்ந்த சோகம்..

English Summary

A divine crocodile protecting the temple for 150 years! Do you know where this temple is?

Next Post

மகிழ்ச்சி...! ஜூன் 30-ம் தேதி வரை துவரம் பருப்பு, பாமாயில் வழங்கும் திட்டம் நீட்டிப்பு...! தமிழக அரசு அறிவிப்பு

Sun Jan 26 , 2025
Extension of the scheme to provide dal and palm oil in ration shops till June 30th.

You May Like