IND vs ENG: இங்கிலாந்துக்கு எதிரான 5வது மற்றும் கடைசி டி20 போட்டியில் சூர்யகுமார் யாதவ் தலைமையிலான இந்திய அணி அபார வெற்றிபெற்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் செய்திருக்கும் இங்கிலாந்து அணி 5 டி20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடர்களில் பங்கேற்றுள்ளது. அதன்படி, முதல் 4 போட்டிகளில் 3 போட்டிகளில் இந்திய அணி வெற்றிபெற்று தொடரைக் கைப்பற்றியது. இங்கிலாந்து அணி ஒரு போட்டியில் வெற்றிபெற்றது. இதையடுத்து, இவ்விரு அணிகளுக்கு இடையிலான 5வது மற்றும் கடைசி டி20 போட்டி, இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இந்தப் போட்டியில் டாஸ் ஜெயித்த இங்கிலாந்து அணி, முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தது. இதையடுத்து இந்திய அணியின் தொடக்க வீரர்களாக வழக்கம்போல சஞ்சு சாம்சனும், அபிஷேக் சர்மாவும் களம் புகுந்தனர். அபிஷேக் சர்மா நிலைத்து நின்று, அதிரடியாய் விளையாட மற்ற வீரர்கள் பெவிலியன் திரும்பியவண்ணம் இருந்தனர்.
மைதானத்தில் வாணவேடிக்கை நிகழ்த்திய அபிஷேக் சர்மா 54 பந்துகளில் 7 பவுண்டரி, 13 சிக்ஸருடன் 135 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதன்மூலம் ஒருசில சாதனைகளையும் படைத்தார். டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிவேகமாக சதம் அடித்த 2வது இந்திய வீரரானார் மற்றும் டி20 சர்வதேசப் போட்டிகளில் அதிக ரன்கள் எடுத்த இந்திய வீரரானார். மேலும், சர்வதேச டி20யில் ஒரே போட்டியில் அதிக சிக்ஸர்கள் அடித்த இந்திய வீரர்கள் பட்டியலிலும் இடம்பிடித்தார். முன்னதாக, டி20யில் அதிவேகமாக அரைசதம் அடித்த 2வது இந்திய வீரர் என்ற சாதனையைப் படைத்தார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 9 விக்கெட் இழப்புக்கு 247 ரன்கள் எடுத்தது. இதன்மூலம் மும்பை மைதானத்தில், டி20களின் அதிகபட்ச ஸ்கோராகவும் இது பதிவானது.
பின்னர், 248 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கை நோக்கி ஆடிய இங்கிலாந்து அணியில் தொடக்க வீரர் சால்ட் மட்டும் அதிரடி காட்டினார். அவர், 23 பந்துகளில் 7 பவுண்டரி, 3 சிக்ஸர்கள் மூலம் 55 ரன்கள் எடுத்தார். என்றாலும் அவரைப்போல மற்ற வீரர்கள் எவரும் விளையாடாததால் அவ்வணியின் தோல்வி உறுதியானது. அதற்கு தகுந்தமாதிரி பந்துவீச்சிலும் இந்திய வீரர்கள் மிரட்டினர். இதனால் அந்த அணி 10.3 ஓவர்களிலேயே 10 விக்கெட்களையும் இழந்து பரிதாப தோல்வியைச் சந்தித்தது. அது, 97 ரன்களுக்கு ஆட்டமிழந்தது. இதன்மூலம் இந்திய அணி 150 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இந்திய அணி தரப்பில் முகமது ஷமி 3 விக்கெட்களையும், வருண் சக்கரவர்த்தி, ஷிவம் துபே, அபிஷேக் சர்மா ஆகியோர் தலா 2 விக்கெட்களை வீழ்த்தினர்.
டி20 சர்வதேச போட்டியில் இரண்டாவது பெரிய வெற்றி:
168 ரன்கள் இந்தியா vs நியூசிலாந்து, அகமதாபாத், 2023
150 ரன்கள் இந்தியா vs இங்கிலாந்து, வான்கடே, 2025
143 ரன்கள் பாகிஸ்தான் vs மேற்கிந்திய தீவுகள், கராச்சி, 2018
143 ரன்கள் இந்தியா vs அயர்லாந்து, டப்ளின், 2018
137 ரன்கள், இங்கிலாந்து vs வெஸ்ட் இண்டீஸ்,
137 ரன்கள் . இந்தியா vs தென் ஆப்பிரிக்கா, ஜோபர்க் 2024.
பவர்பிளேயில் இந்தியாவின் அதிகபட்ச ஸ்கோர் (சர்வதேச டி20):
95/1 vs இங்கிலாந்து, வான்கடே, 2025
82/2 vs ஸ்காட்லாந்து, துபாய், 2021
82/1 vs பங்களாதேஷ், ஹைதராபாத், 2024
78/2 vs தென்னாப்பிரிக்கா, ஜோபர்க், 2018.
சர்வதேச T20 பந்துகளில் அதிவேக சதம்:
35 பந்துகள் டேவிட் மில்லர் vs பங்களாதேஷ், போட்செஃப்ஸ்ட்ரூம், 2017
35 பந்துகள் ரோஹித் ஷர்மா vs இலங்கை, இந்தூர், 2017
37 பந்துகள் அபிஷேக் ஷர்மா vs இங்கிலாந்து, வான்கடே, 2025
39 பந்துகள் ஜான்சன் சார்லஸ் vs தென்னாப்பிரிக்கா, செஞ்சூரியன்,
வங்கதேசம், சாம்420 பந்துகள்23 ஐதராபாத் , 2024.
சர்வதேச டி20 போட்டிகளில் இந்தியாவுக்காக அதிக சதம் அடித்தது:
13 சிக்ஸர்கள் அபிஷேக் ஷர்மா vs இங்கிலாந்து, வான்கடே, 2025
10 சிக்ஸர்கள் ரோஹித் சர்மா vs இலங்கை, இந்தூர், 2017
10 சிக்ஸர்கள் சஞ்சு சாம்சன் vs தென்னாப்பிரிக்கா, டர்பன், 2024
10 சிக்ஸர்கள் திலக் வர்மா vs தென் ஆப்பிரிக்கா, ஜோபர்க், 2024.
சர்வதேச டி20 போட்டியில் இந்திய அணிக்கு அதிகபட்ச தனிப்பட்ட ஸ்கோர்:
135 அபிஷேக் ஷர்மா vs இங்கிலாந்து, வான்கடே, 2025
126* ஷுப்மான் கில் vs நியூசிலாந்து, அஹமதாபாத், 2023
123* ருதுராஜ் கெய்க்வாட் vs ஆஸ்திரேலியா, குவஹாத்தி, 2023
122* விராட் கோஹ்லி vs ஆப்கானிஸ்தான், துபாய், துபாய், துபாய் 21 24 .