fbpx

அதிர்ச்சி!. இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்து!. அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பிய விமானிகள்!. என்ன நடந்தது?.

Indian Air Force: மத்திய பிரதேசம் சிவபுரி மாவட்டத்தில் இந்திய விமானப்படையின் போர் விமானம் விபத்துக்குள்ளானதில் அதிர்ஷ்டவசமாக 2 விமானிகளும் உயிர்தப்பினர்.

மத்தியப் பிரதேச மாநிலம் சிவபுரி மாவட்டத்திக் உள்ள விமானப்படை தளத்தில் இருந்து மிராஜ் 2000 ரக விமானம் நேற்று வழக்கமான பயிற்சி ஈடுபட்டிருந்தது. இரண்டு இருக்கைகள் கொண்ட இந்த விமானத்தில் 2 பைலட்டுகள் சென்றனர். இந்தநிலையில், திடீரென நடுவானில் தொழில் நுட்ப கோளாறு ஏற்பட்டு, விபத்து ஏற்பட்டது. முன்னதாக விபத்து ஏற்படுவதை உணர்ந்த விமானிகள் இருவரும் பாராசூட் மூலம் குதித்து அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர். இதையடுத்து குவாலியர் அருகேயுள்ள பரேட்டா சானி என்ற கிராமத்தில் விழுந்து தீப்பிடித்தது. பாராசூட் மூலம் குதித்த வீரர்கள் காயத்துடன் உயிர் தப்பினர். இவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்க்க உள்ளூர் மக்களும், அதிகாரிகளும் உதவினர். இந்த விபத்துக்கான காரணம் குறித்து ஆராய துறை ரீதியான விசாரணைக்கு விமானப்படை உத்தரவிட்டுள்ளது.

https://twitter.com/FreePressMP/status/1887443419062280416?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1887443419062280416%7Ctwgr%5E18cdef954a4526ca2eb37aae8dda3ab48f65da54%7Ctwcon%5Es1_&ref_url=https%3A%2F%2Fm.dailyhunt.in%2Fnews%2Findia%2Fenglish%2Fforyou%3Fmode%3Dpwaaction%3Dclicklaunch%3Dtrue

மிராஜ் 2000- ரக போர் விமானம் பிரான்ஸ் நாட்டின் டசால்ட் ஏவியேஷன் நிறுவனத்தின் தயாரிப்பு. இந்த விமானம் விமானப்படையில் முக்கிய அங்கமாக திகழ்கிறது. கார்கில் போர் வெற்றிக்கு மிராஜ் 2000 ரக போர் விமானங்களின் பங்களிப்பு மிக முக்கியமாக இருந்தது. மலை உச்சியில் பதுங்கியிருந்து தீவிரவாதிகள் மற்றும் பாகிஸ்தான் ராணுவத்தினர் முகாம்கள் மீது லேசர் குண்டுகளை வீச மிராஜ் 2000 ரக விமானங்கள் முக்கிய பங்காற்றின என்பது குறிப்பிடத்தக்கது. பாகிஸ்தானின் பாலகோட் பகுதியில் தீவிரவாதிகள் முகாம்கள் மீது குண்டுகள் வீசவும் மிராஜ் 2000 ரக விமானங்கள் பயன்படுத்தப்பட்டன.

Readmore: IND vs ENG|கில்-ஸ்ரேயாஸ்-அக்‌ஷர் சரவெடி!. 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை வீழ்த்தி அபாரம்!.

English Summary

Shock!. Indian Air Force fighter jet crashes!. Fortunately, the pilots survived!. What happened?.

Kokila

Next Post

1000 ஆண்டு பழமை.. வியக்க வைக்கும் சிற்பக்கலைகள்.. ராஜராஜ சோழன் கட்டிய சோமநாதீஸ்வரர் கோயில்..!! எங்க இருக்கு தெரியுமா..?

Fri Feb 7 , 2025
1000 years old.. amazing sculptures.. Somanatheeswarar Temple built by Rajaraja Cholan..!! Do you know where it is?

You May Like