இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது.
இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு எழுத இன்று முதல் விண்ணப்பிக்கலாம் என தேசிய தேர்வு முகமை அறிவித்துள்ளது. ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ NTA இணையதளமான neet.nta.nic.in இல் விண்ணப்பிக்கலாம். தமிழகத்தை பொறுத்தவரை அரசு மருத்துவக்கல்லூரிகளில் 5,500க்கும் மேற்பட்ட எம்பிபிஎஸ் மற்றும் பிடிஎஸ் இடங்கள் உள்ளன.
2025-26ம் ஆண்டுக்கான இளங்கலை மருத்துவப் படிப்புகளுக்கான நீட் தேர்வு மே 4-ம் தேதி நடைபெறும் என தேசிய தேர்வு முகமை (NTA) அறிவித்துள்ளது. இத்தேர்வினை எழுதுவதற்கு இன்று முதல் மார்ச் 7ம் தேதி இரவு 11.50 மணி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. neet.nta.nic.in என்ற இணைய முகவரிக்குள் சென்று உரிய படிவத்தை விண்ணப்பித்து, மாணவர்கள் தேர்வு கட்டணத்தை செலுத்தலாம்.
விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள்மாணவர்களின் சரியான இமெயில் முகவரி, செல்போன் எண், 10ஆம் வகுப்பு மதிப்பெண்கள் சான்றிதழ், 12ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ், ஆதார் எண், பெற்றோர்களின் பெயர்கள், மாணவர்களின் புகைப்படம், மாணவர்களின் கையொப்பம்மாற்றுத்திறனாளி சான்றிதழ் (தேவையிருப்பின்).
நீட் தேர்வு விண்ணப்பக் கட்டணம்; இளநிலை நீட் தேர்விற்கு விண்ணப்பிக்க பொதுப் பிரிவின் ரூ.1,700 கட்டணமாக செலுத்த வேண்டும். பொருளாதாரத்தில் பின்தங்கியவர்கள் ரூ.1,600 மற்றும் எஸ்சி & எஸ்டி, மாற்றுத்திறனாளிகள் மற்றும் திருநங்கைகள் ரூ.1000 செலுத்த வேண்டும். வெளிநாடுகளில் இருந்து எழுதுபவர்களுக்கு ரூ.9,500 ஆகும்