இன்றைய இளம் தலைமுறையினர் பல்வேறு கவனச்சிதறல்களில் சிக்கி, படிப்பு மற்றும் எதிர்கால இலக்கை மறந்து செல்லும் சூழலில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பெண் குழந்தைகள் தங்களது கனவை நோக்கி தொடர்ந்து பயணித்து கவனம் ஈர்த்துள்ளனர். தினசரி கூலி வேலை செய்து குடும்பத்தை நடத்தும் பெற்றோரின் பிள்ளைகளான இவர்கள், மருத்துவம் படிக்க வேண்டும் என்ற இலக்குடன் படித்து, தற்போது நீட் தேர்விலும் வெற்றி பெற்றுள்ளனர். குடும்பத்தின் பொருளாதார நிலை படிப்புக்கு […]
neet
நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு மற்றும் முறைகேடுகளைத் தடுக்கும் வகையில் புதிய பாதுகாப்பு நடைமுறைகள் கொண்டுவரப்பட்டுள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. நீட் தேர்வு நடைமுறைகளை மேலும் பாதுகாப்பானதாகவும் வெளிப்படைத்தன்மையுடனும் மாற்றக் கோரி அகில இந்திய மருத்துவர்கள் கூட்டமைப்பு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, தேர்வில் முறைகேடுகளைத் தடுப்பதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகள் குறித்து மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. மத்திய அரசு […]
தமிழ்நாடு சட்டப்பேரவையில் நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி தனித் தீர்மானம் முன்வைக்கப்பட்டது. இந்தத் தீர்மானத்தை அமைச்சர் அருண் முன்மொழிந்தார். நீட் தேர்வை ரத்து செய்யும் தீர்மானத்துக்கு திமுக, அதிமுக, பாமக உள்ளிட்ட கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆதரவு தெரிவித்து பேசினார்கள். அப்போது, நீட் தேர்வு முறைக்கு எதிரான இந்தத் தீர்மானத்தில் பாஜக எம்.எல்.ஏ. போஜராஜன் தனது எதிர்ப்பை பதிவு செய்தார். மேலும், மாணவர்கள் நீட் தேர்வை எதிர்கொள்ளும் வகையில் அரசு […]
2026-ல் அதிமுக ஆட்சியில் மனை இல்லாதவர்களுக்கு அரசே மனையை வாங்கி, கான்கிரீட் வீடுகளைக் கட்டிக்கொடுக்கும் என எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ பிரச்சாரப் பயணத்தில் நேற்று ராசிபுரத்தில் பேசிய எடப்பாடி பழனிச்சாமி: ஜூலை 7-ம் தேதி நான் எழுச்சிப் பயணம் தொடங்கினேன். இன்று 154-வது தொகுதியாக ராசிபுரத்தில் உங்களை சந்திக்கிறேன். முன்னாள் அமைச்சர் தங்கமணி கூறியது போன்று, ஒரு மணி நேரம் மக்கள் வெள்ளத்தில் நீந்தி […]
மருத்துவ படிப்பிற்கு இடம் பெற்று தருவதாக கூறி இடைத்தரகர்கள் என்ற பெயரில், இலட்சக்கணக்கான பணத்தை பொது மக்களிடமிருந்து பெற்று மோசடி செய்யும் சம்பவங்கள் குறித்த புகார்கள் சமீப காலமாக பெறப்படுகிறது என்றும், இது போன்ற இடைத்தரகர்கள் யாரையும் பொதுமக்கள் நம்பி ஏமாற வேண்டாம் என்றும் சென்னை பெருநகர காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது. இது குறித்து சென்னை பெருநகர காவல்துறை வெளியிட்ட அறிக்கையில், “மருத்துவக் கல்லுாரிகளில் சேர்க்கை, நீட் தேர்வில் தேர்ச்சிப் […]
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஜேஇஇ, நீட் உள்ளிட்ட போட்டித் தேர்வுகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக 236 வட்டார உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பள்ளிக் கல்வித் துறை தெரிவித்துள்ளது. இதுகுறித்து, அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு பள்ளிக் கல்வி இயக்குநர் சகண்ணப்பன் அனுப்பிய சுற்றறிக்கையில் ; உயர் கல்விக்கான நீட், ஜேஇஇ உள்ளிட்ட போட்டித் தேர்வுகள் எழுத விருப்பமுள்ள மாணவர்களுக்காக வட்டார அளவிலான உயர்கல்வி வழிகாட்டு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதுதவிர, […]
நீட் மறு தேர்வு நடத்த உத்தரவிட முடியாது எனக் கூறி மேல் முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது சென்னை உயர் நீதிமன்றம் மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு தேர்வு தொடங்கிய நிலையில் கனமழை காரணமாக 3 மணியில் […]
நீட் தேர்வில் 680 மதிப்பெண் எடுத்த கோயம்புத்தூர் மாணவி அபிஷியாவுக்கு குறைவான பர்சன்டேஜ் வழங்கப்பட்டது புதிய சர்ச்சை எழுந்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் உள்ளிட்ட இளநிலை மருத்துவப் படிப்புகளில் மாணவர்கள் சேர்வதற்கு தேசிய அளவில் நீட் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாகும். தமிழ்நாடு தொடர்ச்சியாக எதிர்த்து வந்தாலும், நீட் தேர்வு கட்டாயம் என்பதில் மத்திய அரசு தீவிரமான நிலைப்பாடு கொண்டுள்ளது. இதனை எதிர்த்து தமிழக அரசு போராடி வருகிறது. இந்த […]
நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை தேசிய தேவு முகமை வெளியிட்டுள்ளது. நீட் இளங்கலை தேர்வு முடிவுகள் தற்போது வெளியாகி உள்ளன. தேசிய தேர்வு முகமை (NTA) நீட் இளங்கலை தேர்வு முடிவுகளை இன்று அறிவித்துள்ளது. மருத்துவ நுழைவுத் தேர்வில் கலந்து கொண்ட விண்ணப்பதாரர்கள் தங்கள் தகுதி நிலையை neet.nta.nic.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சரிபார்க்கலாம். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, இந்த ஆண்டு இளங்கலை NEET UG 2025-க்கு கிட்டத்தட்ட 23 லட்சம் […]
கடந்த மே 4-ம் தேதி நடத்தப்பட்ட நீட் தேர்வை ரத்து செய்து, மறுதேர்வு நடத்தக் கோரி 16 மாணவர்கள் தாக்கல் செய்த வழக்குகளை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மருத்துவப் படிப்பிற்கான இளநிலை நீட் தேர்வு 2025 இந்தியா முழுவதும் பல்வேறு மையங்களில் கடந்த 4-ம் தேதி நடத்தப்பட்டது. சென்னையை அடுத்த ஆவடி மையத்தில் 464 மாணவர்களுக்கு தேர்வு எழுத நுழைவுச்சீட்டு வழங்கப்பட்டது. பிற்பகல் 2 மணிக்கு […]

