லொள்ளு சபா, கனா காணும் காலங்கள் உள்ளிட்ட விஜய் டிவி ரியாலிட்டி ஷோக்களில் கலந்து கொண்டு ரசிகர்களை சிரிக்க வைத்த நடிகர் சிரிக்கோ உதயா அவர்கள் சர்க்கரை வியாதியால் பாதிக்கப்பட்டு, ஓமந்தூரார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு சர்க்கரை நோயின் தாக்கம் காரணமாக இடது காலை எடுக்க வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கிறது.
இதுகுறித்து அவர் மகள் கூறுகையில், “கடந்த சில மாதங்களாக அப்பா உடல்நிலை பாதிக்கப்பட்டிருந்தார். சர்ச்சரை நோய் தாக்கம் அதிகரித்தது. இதன் காரணமாக அவருக்கு இடது காலில் முட்டிக்கு கீழ் பகுதி முழுவதும் அறுவை சிகிச்சை மூலமாக எடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. தற்போது அப்பா நன்றாக இருக்கிறார்” என்றார்.
சிரிக்கோ உதயா சிறந்த நடிகர் மட்டுமல்ல, சிறந்த ஸ்கிரிப்ட் ரைட்டர் மட்டுமல்ல, சிறந்த வயலின் கலைஞரும் கூட. இவர் பல பாடலுக்கு வயலின் வாசித்துள்ளார். தற்போது அறுவை சிகிச்சை மூலம் கால் அகற்றப்பட்டுள்ள உதயா, உதவி வேண்டி உருக்கமாக வேண்டுகோள் விடுத்துள்ளார்..
அவருக்கு அறுவை சிகிச்சை மூலம் ஒரு கால் அகற்றப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ள நிலையில், அவர் சிகிச்சை பெற்று வரும் மருத்துவமனைக்கு பல திரை உலக பிரபலங்கள் சந்தித்து நலம் விசாரித்து வருகின்றனர். இசை அமைப்பாளர் மற்றும் தயாரிப்பாளர் சுவாமிநாதன் ராஜேஷ் அவர்கள் நடிகர் சிரிக்கோ உதயா அவர்களை ஓமந்தூரார் அரசு மருத்துவமனையில் நேரில் சந்தித்து நலம் விசாரித்தார். அவருடன் , நடிகர் மற்றும் விநியோகஸ்தர் ஜெனிஷ் மற்றும் குழுவினர் உடன் சென்றனர்.
RVR STUDIOS மற்றும் ACTION REACTION சார்பில் சிரிக்கோ உதயாவுக்கு ரூ.20,000 பொருளாதார உதவியையும் வழங்கினர். விரைவில் முழுமையான நலத்துடன் அவர் திரும்பி, திரையில் மீண்டும் தனது சிறப்பான நடிப்பால் அனைவரையும் மகிழ்விக்க வேண்டும் என வாழ்த்து கூறினார்.
விஜய் டிவி பிரபலம் டி. எஸ். கே சிரிக்கோ உதயாவை நேரில் சந்தித்து, நிதி உதவி வழங்கினார். நேற்று, நடிகர்கள் முத்துக்காளை மற்றும் கிங்காங் ஆகியோர் ஓமந்தூரார் மருத்துவமனைக்கு சென்று சிரிக்கோ உதயாவின் உடல் நலம் விசாரித்து, பின்னர் பண உதவி செய்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
Read more : “இந்த வயசுல நீ எவன் கூட பேசுற” தந்தையுடன் சேர்ந்து 2 மகன்கள் செய்த கொடூரம்!!!