fbpx

“நான் அந்த நடிகையை தான் காதலித்தேன், ஆனால் திருமணம் செய்துகொள்ள முடியவில்லை” நடிகர் கமல்ஹாசன் பகிர்ந்த சீக்ரெட்..

கடந்த சில வருடங்களுக்கு முன்பு, டிடி வித் காபி நிகழ்ச்சியில் நடிகர் கமல்ஹாசன் கலந்து கொண்டார். அப்போது அவர், தான் ஸ்ரீ வித்யாவை காதலித்ததாகவும், ஆனால் ஒரு சில காரணங்களால் இருவரும் பிரிந்து விட்டதாக கூறி இருந்தார். இவர் கூறிய இந்த தகவல் பெரிய அளவில் வைரல் ஆனது. இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் குறித்து நடிகை ஸ்ரீவித்யா பேசிய பழைய பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

சினிமாவில் கதாநாயகியாகவும், குணசித்திர நடிகையாகவும் பல திரைப்படங்களில் நடித்தவர் தான் நடிகை ஸ்ரீவித்யா. இவர் தனது எதார்த்தமான நடிப்பின் மூலம் ரசிகர்களின் மனதை கவர்ந்தவர். இவரது அம்மா பாடகி என்பதால் ஸ்ரீவித்யா சினிமாவில் அறிமுகமானார். ஸ்ரீவித்யா அபூர்வ ராகங்கள் என்ற திரைப்படத்தில் நடிக்கும் போது, அவருக்கும் கமலுக்கும் பழக்கம் ஏற்பட்டு அது நாளடைவில் காதலாக மாறியது.

இது குறித்து அறிந்த ஸ்ரீவித்யாவின் அம்மா, கமல்ஹாசனை நேரில் அழைத்து திருமணத்திற்கு சம்மதிக்க முடியாது என்று கூறிவிட்டார். இதனால் கமல் காதலை கைவிட்டு விட்டு வேறு ஒருவரை திருமணம் செய்தார். கமலின் திருமணத்திற்கு பிறகு, சில ஆண்டுகள் தனிமையில் இருந்த ஸ்ரீவித்யா, பின்னர் மலையாள ப்ரொடியூசரான சார்ஜ் என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார். ஆரம்பத்தில் இனிமையாக இருந்த அவறது வாழ்க்கை, பின்னர் கசந்து விட்டது.

ஜார்ஜின் சுயரூபம் தெரிந்து பிறகு, ஸ்ரீ வித்யா பல முறை தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளார். இந்த நிலையில் அவர் அளித்த பேட்டி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அதில் அவர் அபூர்வ ராகங்கள் படத்தில் நடிக்கும் போது நடந்த நிகழ்வுகளை பகிர்ந்து இருந்தார். அதில் அவர் கூறும் போது, “அப்போது எனக்கு 22 வயது தான், ஆனால் நான் அந்த படத்தில் 45 வயது உள்ள கேரக்டரில் நடித்தேன்” என்று கூறினார்.

அதற்கு தொகுப்பாளர் நீங்கள் ஏன் அந்த படத்தில் நடிக்க சம்மதம் சொன்னீங்க, கமல்ஹாசனுக்காகவா என்று கேட்டுள்ளார். அதற்கு பதில் அளித்த ஸ்ரீவித்யா, ஆமாம் அப்படியும் கூட இருக்கலாம். அதுவும் முக்கிய காரணமாக இருந்திருக்கலாம் என்று கூறியுள்ளார். பிறகு நீங்கள் ஏன் பிரிந்து விட்டீர்கள் என்று கேட்டதற்கு நாங்கள் இருவரும் மனப்பூர்வமாக பேசி தான் பிரிந்தோம். எங்களுக்கு அந்த நேரத்தில் கடமைகளும் இருந்தது என்று கூறியுள்ளார்.

Read more: “ஸ்கூலுக்கு போக பிடிக்கவில்லை” மாணவி போட்ட பிளானை கேட்டு விழிபிதுங்கிய காவல் துறை…

English Summary

kamal hasan shares about her love in an interview

Next Post

“தாத்தா என்ன தொடாதீங்க பிளீஸ்..” கதறி துடித்த சிறுமிகள்; இரக்கம் இல்லாமல் முதியவர்கள் செய்த காரியம்..

Sat Feb 22 , 2025
school kids was sexually abused by old people

You May Like