ஒவ்வொரு பெண்ணிற்கு இருக்கும் ஒரே ஆசை, முகம் பளபளப்பாக இருக்க வேண்டும் என்பது தான். ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில், பல்வேறு காரணங்களால் பல பெண்களுக்கு முகம் முழுவதும் பருக்கள் மற்றும் தழும்புகள் தான் அதிகம் உள்ளது. இந்த சோகத்தில், பல ஆயிரங்கள் செலவு செய்து கண்ட கிரீம்களை வாங்கி பயன்படுத்தி விடுகின்றனர்.
இதனால் ஏற்படும் நன்மையை விட பக்க விளைவுகள் தான் அதிகம். ஆம், கிரீம்களில் உள்ள கெமிக்கல் முகத்தின் இயற்க்கை பொலிவை கெடுத்து விடும். இதனால் முடிந்த வரை இயற்கையான பொருள்களை வைத்து முகத்தை பராமரிப்பது நல்லது. அந்த வகையில், மஞ்சள் மற்றும் நெய் பேஸ் பேக் போடுவதால் முகம் பளபளப்பாக இருக்கும். ஆம், பல நூற்றாண்டுகளாக முகத்தின் அழகை மேம்படுத்த மஞ்சள் மற்றும் நெய் பயன்படுத்தப்பட்டு வருகிறது.
மஞ்சள் மற்றும் நெய் ஆகிய பொருள்களை ஒன்றாக கலந்து முகத்தில் தடவினால் முகம் பளபளக்கும். ஏனென்றால், மஞ்சளில் அலர்ஜி எதிர்ப்பு மற்றும் ஆக்ஸிஜனேற்ற பண்புகள் அதிகம் உள்ளது. அதே சமயம், நெய்யில் ஊட்டமளிக்கும் மற்றும் ஈரப்பதமூட்டும் பண்புகள் அதிகம் உள்ளது. எனவே இந்த இரண்டு பொருள்களையும் ஒன்றாக கலந்து முகத்தில் தடவும் போது, முகம் தங்கம் போல் ஜொலிக்கும்.
இந்த பேஸ் பேக்கை போடுவதால், மாசு, தூசி போன்ற சுற்றுச்சூழல் பாதிப்புகளில் இருந்து முகம் பாதுகாக்கப்படுகிறது. மேலும், சருமம் ஆரோக்கியமாகவும், பளபளப்பாகவும் இருக்கும். மஞ்சள், சருமத்தில் இருக்கும் இறந்த செல்களை நீக்க உதவுவதால், முகம் வறட்சியாக பொலிவு இல்லாமல் இருக்கும் நிலை மாறும். மேலும், சருமம் பளபளப்பாகவும், பொலிவாகவும் இருக்கும்.
பல பெண்களுக்கு இருக்கும் பிரச்சனையான கரும்புள்ளிகள் மற்றும் சீரற்ற சருமம் இந்த பேஸ் பேக் போடுவதால் சீராகும். இந்த பேஸ் பேக்கை தொடர்ந்து பயன்படுத்தும் போதும், முகத்தில் உள்ள சுருக்கங்கள் குறையும். இதனால் முன்கூட்டியே வயதாவதைத் தடுக்க முடியும். மஞ்சளில் குர்குமின் இருப்பதால், இது முகப்பரு ஏற்படாமல் சருமத்தை மென்மையாக வைத்திருக்கும்.
Read more: காலில் வெடிப்பு இருக்கா? இதை செய்யாவிட்டால் தோல் முற்றிலும் கெட்டுவிடும்!!!