ஆந்திராவின் காக்கிநாடாவில் பட்டாசு பார்சலை இறக்கும் போது ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது. இதில் 5 தொழிலளர்கள் படுகாயமடைந்தனர். இந்த பார்சல் ஹைதராபாத்திலிருந்து காக்கிநாடாவுக்கு வந்தது. சிசிடிவி காட்சிகளில் குறைந்தது ஆறு பேர் வாகனத்தில் இருந்து பொருட்களை இறக்குவதைக் காட்டியது. இந்தச் சமயத்தில், ஒரு தொழிலாளி ஒரு பெரிய அட்டைப்பெட்டியை எடுத்து தரையில் போட்டவுடன், அதிலிருந்து ஒரு பெரிய வெடிப்பு ஏற்பட்டது.
இந்த விபத்தில் 5 பேர் படுகாயமடைந்தனர். காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். காக்கிநாடா மாவட்ட காவல் கண்காணிப்பாளர் (SP) பிந்து மாதவ் இந்த சம்பவம் குறித்து கூறுகையில், “ஜெய் பாலாஜி டிரான்ஸ்போர்ட்டர்ஸில் தொழிலாளர்கள் ஒரு பார்சலை இறக்கிக்கொண்டிருந்தபோது வெடிப்பு ஏற்பட்டது. தாக்கத்தின் காரணமாக, பட்டாசுகள் வெடித்து ஐந்து பேர் காயமடைந்தனர்” என்று கூறினார். அதைத் தொடர்ந்து, போலீசார் கூடுதலாக இரண்டு பட்டாசுப் பைகளை பறிமுதல் செய்து, இந்த விவகாரம் குறித்து விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.
Read more:ஆஸ்கார் கோப்பையை வடிவமைத்தவர் யார்? அதன் விலை எவ்வளவு தெரியுமா..?