பிரபல கவிஞரும், பட்டிமன்ற பேச்சாளருமான நந்தலாலா உடல்நலக்குறைவு காரணமாக காலமானார். உடல்நலக்குறைவால் பெங்களூரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த இவர், சிகிச்சை பலனின்றி காலமானார்.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தின் மாநிலத் துணைத்தலைவராக இருந்தவர் நந்தலாலா. இவரது மறைவு குறித்து அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக மதுரை எம்.பி சு.வெங்கடேசன் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், ”நந்தலாலா மறைந்தார் எனும் கொடுஞ்செய்தியை ஏற்க முடியாமல் திணறிக் கொண்டிருக்கிறேன்.
தமுஎகச மேடையின் தனித்த அடையாளமாக, சமத்துவ கோட்பாட்டின் தன்னிகரற்ற முழக்கமாக இடைவிடாது ஒலித்துக் கொண்டிருந்த குரல் ஓய்ந்தது. தீந்தமிழின் புதுமொழியை தமிழ்நாட்டிற்கு அளித்துச்சென்றுள்ள தோழர் நந்தலாலாவுக்கு வீரவணக்கம்” என பதிவிட்டுள்ளார். மேலும், பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும், எழுத்தாளர்களும் நந்தலாலா மறைவுக்கு அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
Read More : விவசாயிகளுக்கு செம குட் நியூஸ்..!! கரும்பு கொள்முதல் விலை அதிரடி உயர்வு..!! ஒரு டன் எவ்வளவு தெரியுமா..?