fbpx

கணவன் கண் முன், பாஜக பிரமுகருக்கு முத்தம் கொடுத்த மனைவி; தட்டிக்கேட்ட கணவருக்கு நேர்ந்த சோகம்..

குமரி மாவட்டம், பத்துகாணி பகுதியில் 48 வயதான அனில்குமார் என்பவர் வசித்து வருகிறார். ஆட்டோ ஓட்டுநரான இவருக்கு, 40 வயதான தன்யா என்ற மனைவியும், இரண்டு மகன்களும் உள்ளனர். தன்யா, தனது கணவர் நடத்தி வரும் பலசரக்கு கடையை கவனித்து வருகிறார். இந்நிலையில், அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த பாஜக பிரமுகரான மது குமார் என்பவருக்கு இடையே பழக்கம் ஏற்பட்டுள்ளது.

இவர்களின் பழக்கம், நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, கடந்த மாதம் அனில்குமார் தனது கடைக்கு இரவில் சென்றுள்ளார். அப்போது, அவரது மனைவி மது குமாருடன் முத்தம் பரிமாறி கொண்டிருந்துள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த அனில் குமார், எதுவும் கேட்டகாமல் வீட்டிற்க்கு வந்துவிட்டார். பின்னர் வீட்டிற்க்கு வந்த மனைவியிடம் நடந்த சம்பவம் குறித்து விசாரித்துள்ளார்.

அப்போது இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு உள்ளது. இதையடுத்து, தன்யா நடந்ததை எல்லாம் தனது கள்ளக்காதலனிடம் கூறி அழுதுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மது குமார், அனில்குமாரை அரிவாளால் வெட்ட முயன்றுள்ளார். ஆனால் அனில்குமார் சுதாரித்து கொண்டு அங்கிருந்து விலகியுள்ளார். இதனையடுத்து மது குமார் அனில்குமாரை சரமாரியாக தாக்கிவிட்டு தப்பி சென்றுள்ளார்.

இதில் படுகாயமடைந்த அனில்குமாருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. மேலும், சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆறுகாணி போலீசார், மது குமார் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். பின்னர், ஜாமீனில் வெளியே வந்த மது குமார், மீண்டும் தன்யாவுடன் உல்லாசமாக இருந்துள்ளார். இதையடுத்து, அனில்குமார் தனது மனைவியை பலமுறை கண்டித்து உள்ளார்.

ஆனால் தன்யா அவரது பேச்சை கேட்கவில்லை. இதனால் ஆத்திரம் அடைந்த அனில்குமார், கடையில் வைத்து தன்யாவை இரும்பு கம்பியால் அடித்துள்ளார். இதில் தலையில் பலத்த காயமடைந்த தன்யா, தரையில் மயங்கி விழுந்துள்ளார். தனது மனைவி இறந்துவிட்டதாக நினைத்த அனில்குமார், வீட்டிற்கு சென்று தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

இதையடுத்து, சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த ஆறுகாணி போலீசார், உயிருக்கு போராடிய தன்யாவை மீட்டு கேரள மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்தனர். தொடர்ந்து, தற்கொலை செய்து கொண்ட அனில் குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். இதையடுத்து, போலீசார் சம்பவம் தொடர்பாக தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Read more: 11 வயது மகள் மீது, தந்தைக்கு ஏற்பட்ட ஆசை; ஆசையை அடக்க முடியாமல் தந்தை செய்த காரியத்தால் பரபரப்பு..

English Summary

wife was killed by her husband

Next Post

"காங்கிரஸ் எம்.பி சசிகாந்த் செந்தில் மன்னிப்பு கேட்க வேண்டும்..!" - அண்ணாமலை வார்னிங்.. என்ன விவகாரம்..?

Sun Mar 9 , 2025
Annamalai has said on his social media page that Congress MP Sasikanth Senthil should apologize.

You May Like