Train hijack: பாகிஸ்தானில் தீவிரவாதிகளால், கடத்தப்பட்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயிலில் இருந்து 346 பணயக்கைதிகள் விடுவிக்கப்பட்டதாகவும், 28 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாகவும் பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பலூசிஸ்தான் மாகாணம், பல ஆண்டுகளாக கிளர்ச்சியின் மையமாக இருந்து வருகிறது, பி.எல்.ஏ போன்ற பிரிவினைவாத குழுக்கள் அதிக சுயாட்சி அல்லது சுதந்திரத்தை கோருகின்றன, இஸ்லாமாபாத் மாகாணத்தின் கனிம வளங்களை சுரண்டுவதாகக் காரணம் குற்றம்சாட்டிவருகின்றனர். அதனால், கடந்த ஆண்டு முதல் மாகாணத்தில் பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன.,
இந்தநிலையில்தான், பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படை வீரர்கள் சென்ற விரைவு ரயிலை கடந்த 11ம் தேதி கிளர்ச்சிப்படையினர் கடத்தினர். இந்த கடத்தல் சம்பந்தமாக பலோச் விடுதலை ராணுவம் என்ற அமைப்பு அறிக்கை ஒன்றை விடுத்திருந்தது. அந்த அறிக்கையில், “ரயிலில் இருந்த பாதுகாப்பு படை வீரர்கள் 6 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். அதே சமயம் ரயில் உள்ள பெண்கள், குழந்தைகள் மற்றும் மற்ற பயணிகளை விடுவித்துவிட்டோம். 100 பேர் எங்கள் கட்டுப்பாட்டில் உள்ளனர். குவெட்டாவிலிருந்து பெஷாவருக்குச் சென்று கொண்டிருந்த 9 பெட்டிகளைக் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸ், கச்சி மாவட்டத்தின் போலான் பகுதியில் உள்ள பெஹ்ரோ குன்ரி மற்றும் கடலார் இடையே குறிவைக்கப்பட்டு தாக்கப்பட்டதாக பலுசிஸ்தான் அரசாங்க செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். சுரங்கப்பாதை எண் 8-ல் சுமார் 500 பேருடன் வந்த ரயிலை ஆயுதமேந்திய நபர்கள் தடுத்து நிறுத்தியதாக ரயில்வே கட்டுப்பாட்டாளர் முகமது காஷிஃப் தெரிவித்தார்.
இது தொடர்பாக ராணுவ நடவடிக்கை மேற்கொண்டால் பாதுகாப்பு படை வீரர்கள் அனைவரும் கொலை செய்யப்படுவார்கள்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக பலுசிஸ்தானின் மாக் பகுதியில் பெஷாவர் – குவெட்டா இடையே இயக்கப்படும் ஜாஃபர் எக்ஸ்பிரஸ் ரயில் ஆயுதமேந்திய நபர்களால் தாக்கப்பட்டதாகப் பாகிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன. அந்த வகையில் ஊடகம் ஒன்றின் சார்பில் தெரிவிக்கையில், “9 பெட்டிகள் கொண்ட ஜாஃபர் எக்ஸ்பிரஸில் இருந்த 400க்கும் மேற்பட்ட பயணிகள் மற்றும் ஊழியர்களுடன் எந்த தொடர்பும் கிடைக்கவில்லை என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்திருந்தனர். தாதரில் உள்ள பனையூர் ரயில் நிலையம் அருகே ஜாபர் எக்ஸ்பிரஸ் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டன.
இந்த ரயிலைச் சுற்றி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது. இதனால் ரயில் ஓட்டுநர் படுகாயமடைந்தார். ரயில் பயணிகளும் காயமடைந்தனர்” எனத் தெரிவிக்கப்பட்டிருந்தது. முன்னதாக, புதன்கிழமை அதிகாலை நிலவரப்படி, 16 தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாகவும், சுமார் 190 பயணிகள் மீட்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது இந்நிலையில் இந்த ரயிலை கிளர்ச்சிப்படையினர் கடத்தப்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. இந்த ரயிலில் இருந்த பாகிஸ்தான் ராணுவ வீரர்கள் 28பேரைச் சுட்டுக் கொன்றனர். ரயிலில் இருந்த 400க்கும் மேற்பட்டோரைப் பிணைக்கைதிகளாகப் பிடித்து வைக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது 346 பேர் விடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. மேலும் இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வெளியாகிப் பார்ப்போரின் மனதைப் பதைபதைக்க வைக்கிறது.