மனிதனின் ஆரோக்கியத்திற்கு மிகப்பெரிய எதிரி என்றால் அது வெள்ளை சர்க்கரை தான். உடலில் உள்ள பாதி பிரச்சனைக்கு முக்கிய காரணம் இந்த வெள்ளை சர்க்கரை தான் என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? ஆனால் அது தான் உண்மை. அதே சமயம் நமது முன்னோர்கள் ஆரோக்கியமாகவும் வலுவாகவும் இருந்த முக்கிய காரணம் பனங்கருப்பட்டி தான்.
ஆம், பல்வேறு மருத்துவ பயன்கள் கொண்ட பனங்கருப்பட்டி நமது ஆரோக்கியத்தை மேம்படுத்தும். பனங்கருப்பட்டியில் இரும்பு மற்றும் கால்சியம் சத்து அதிகமாக உள்ளதால், இது நமது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும். மேலும், இதில் உள்ள விட்டமின் பி மற்றும் அமினோ அமிலங்கள், நீரிழிவு நோயை கட்டுப்படுத்துகிறது. மேலும், இது கருப்பையை ஆரோக்கியமாக வைத்திருக்கும்.
இதனால் தான், பருவமடைந்த பெண்களுக்கு கருப்பட்டியையும் உளுந்தையும் சேர்த்து உளுந்தங்களி செய்து கொடுப்பார்கள். நார்ச்சத்து அதிகம் உள்ள கருப்பட்டியை குப்பைமேனி கீரையுடன் வதக்கி சாப்பிட்டால் வறட்டு இருமல், நாள்பட்ட சளி குணமாகும். கருப்பட்டியில் எண்ணற்ற விட்டமின்களும் மினரல் சத்துக்களும் உள்ளதால், இது இயற்கையாகவே உடலை குளிர்ச்சியாக்கும்.
இதனால் இந்த வெயில் காலத்தில் முடிந்த வரை வெள்ளை சர்க்கரைக்கு பதில் கருப்பட்டியை பயன்படுத்துங்கள். சர்க்கரை நோயாளிகளுக்கு, வெள்ளை சர்க்கரையை விட கருப்பட்டி பல மடங்கு பாதுகாப்பானது. வெள்ளை சர்க்கரைக்கு பதிலாக கருப்பட்டி காபி குடிப்பதால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும். குழந்தைகளுக்கு கருப்பட்டி பணியாரம் குடுப்பதால் அவர்களின் ஆரோக்கியம் மேம்படும்.
Read more: அடிக்கடி இந்த ஜூஸ் குடிங்க; எப்படி உன்னோட முகம் இவ்ளோ பளபளப்பா இருக்குனு ஊரே கேட்க்கும்..