fbpx

கார் ஓட்டும்போது வந்த மாரடைப்பால் பெரும் விபத்து..!! நெஞ்சை பதற வைக்கும் காட்சி

மகாராஷ்ராவில் கார் ஓட்டிக் கொண்டிருக்கும்போதே மாரடைப்பு ஏற்பட்டு 55 வயதான நபர் உயிரிழந்துள்ளார். இது சம்பந்தமான வீடியோ காட்சிகள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

மகாராஷ்டிராவின் கோலாப்பூரில் கடந்த மார்ச் 15ஆம் தேதி அதிகாலை வேலைக்கு சென்றுக் கொண்டிருந்த போது அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டிருக்கிறது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த கார் வேகமாக பாய்ந்து சாலையோரம் இருந்த கார்கள் மீது மோதி விபத்தில் சிக்கியது. இந்த சம்பவத்தில் வாகனங்கள் பலத்த சேதமடைந்தன. இதுகுறித்து அறிந்த அக்கம் பக்கத்தினர் உடனே அந்த நபரை மீட்டு அருகில் இருக்கும் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு மருத்துவர்கள் பரிசோதனை அவர் உயிரிழந்துவிட்டதாக கூறியுள்ளனர்.

பிரேத பரிசோதனை அறிக்கையில், வாகனம் ஓட்டும்போது அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டதாகவும், அதுவே கடுமையான விபத்திற்குக் காரணமாக அமைந்து, அவரது மரணத்திற்கு வழிவகுத்ததாகவும் கூறப்பட்டுள்ளது. இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது சம்பவம் தொடர்பான வீடியோ அங்கிருக்கும் சிசிடிவி கேமராவில் பதிவாகி உள்ளது. இது வீடியோ சமூக வலைதளங்களிலும் வெளியாக உள்ளது.  அந்த வீடியோவில், கார் ஒன்று வேகமாக பாய்ந்து தலைக்குப்புற கவிழ்ந்துள்ளது போன்று வீடியோவில் உள்ளது.  இந்த வீடியோ பார்ப்போரை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Read more: நடைபயிற்சி இரத்த சர்க்கரையை குறைக்குமா..? நீரிழிவு நோயாளிகள் கட்டாயம் தெரிந்து கொள்ளுங்கள்..!!

English Summary

A 55-year-old man has died after suffering a heart attack while driving in Maharashtra.

Next Post

சுமார் 1,500 பேர் பங்கேற்றிருந்த இசை நிகழ்ச்சியில் பயங்கர தீ விபத்து.. 51 பேர் பலி.. பலர் படுகாயம்..!!

Sun Mar 16 , 2025
Massive fire breaks out in North Macedonia's nightclub; 51 killed, 100 injured

You May Like