அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திடீரென டெல்லி பயணம் மேற்கொள்ளவுள்ளதால் அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சட்டப்பேரவையில் பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற்று வரும் நிலையில், எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.
டெல்லியில் உள்ள அதிமுக அலுவலகத்தை பார்வையிடுவதற்கு எடப்பாடி பழனிசாமி செல்வதாக தகவல்கள் வெளியானாலும், அங்கு முக்கிய தலைவர்களை சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அடுத்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், பாஜகவுடன் அதிமுக மீண்டும் கூட்டணி அமைக்க உள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகியுள்ளது.
பாஜகவுடன் இனி கூட்டணி அமைக்க மாட்டோம், அதிமுகவின் கொள்கை வேறு, கூட்டணி வேறு என கூறி வந்த எடப்பாடி பழனிசாமி தற்போது டெல்லிக்கு சென்றுள்ளார். முன்னதாக அதிமுக – தவெக கூட்டணி அமைக்கவுள்ளதாக பேச்சுகள் அடிபட்ட நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி வைக்க அதிமுக ஆயத்தமாகி வருகிறது.
Read More : ’அந்த நீரை தமிழக மக்கள் வேண்டவே வேண்டாம் என்கிறார்கள்’..!! சட்டப்பேரவையில் அமைச்சர் கே.என்.நேரு விளக்கம்..!!