கோடை வெயிலின் தாக்கம் காரணமாக தக்காளி விளைச்சல் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், விலை தாறுமாறாக உயர்ந்துள்ளது.
நமது அன்றாட சமையலுக்கு காய்கறிகள் அத்தியாவசியமானதாக இருக்கிறது. எனவே, மற்ற காய்கறிகளை காட்டிலும், மக்கள் அதிகம் வாங்குவது தக்காளி, வெங்காயம் தான். ஏனென்றால், இது அனைத்து வகையான சமையலுக்கும் பயன்படுத்தப்படுகிறது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு ஒரு கிலோ தக்காளி மற்றும் வெங்காயம் ரூ.100-ஐ தாண்டி விற்பனையானது.
இந்நிலையில், தற்போது கோடை வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால், தக்காளி விளைச்சல் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால், தற்போது விலை அதிகரித்துள்ளது. ஒரு கிலோ தக்காளி ரூ.12-க்கு விற்கப்பட்ட நிலையில், தற்போது ரூ.25 வரை விற்பனையாகிறது. அதேபோல், ஒரு கிலோ வெங்காயம் ரூ.5 உயர்ந்து ரூ.25-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை கோயம்பேடு காய்கறி நிலவரம் :
ஒரு கிலோ தக்காளி – ரூ.25
ஒரு கிலோ பெரிய வெங்காயம் – ரூ.20 முதல் ரூ.30
ஒரு கிலோ சின்ன வெங்காயம் – ரூ.35 முதல் ரூ.50
ஒரு கிலோ பச்சை மிளகாய் – ரூ.20
ஒரு கிலோ பீட்ரூட் – ரூ.20
ஒரு கிலோ உருளைக்கிழங்கு – ரூ.25
ஒரு கிலோ குடைமிளகாய் – ரூ.30
ஒரு கிலோ பாகற்காய் – ரூ.30
ஒரு கிலோ சுரைக்காய் – ரூ.25
ஒரு கிலோ அவரைக்காய் – ரூ.50
ஒரு கிலோ முட்டைக்கோஸ் – ரூ.10
ஒரு கிலோ கேரட் – ரூ.40
ஒரு கிலோ காலிபிளவர் – ரூ.20
ஒரு கிலோ கொத்தவரை – ரூ.50
ஒரு கிலோ வெள்ளரிக்காய் – ரூ.15
ஒரு கிலோ முருங்கைக்காய் – ரூ.20
ஒரு கிலோ கத்திரிக்காய் – ரூ.40
ஒரு கிலோ பீன்ஸ் – ரூ.80
ஒரு கிலோ இஞ்சி – ரூ.50
ஒரு கிலோ வெண்டைக்காய் – ரூ.20
ஒரு கிலோ முள்ளங்கி – ரூ.15
ஒரு கிலோ பீர்க்கங்காய் – ரூ.40
ஒரு கிலோ புடலங்காய் – ரூ.20